மனிதர்கள் யானைகளின் வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டிவிட்டு யானைகள் அட்டகாசம் செய்வதாகக் கூறுகிறோம். யானைகள் அதன் போக்கில் சென்றால் வலிய போய் இந்த மனிதர்கள் சேட்டை செய்தால் அதற்கு யானைகள் எதிர்வினையாற்றினால், யானைகள் தாக்கிவிட்டது என்கிறோம். இப்படி மனிதர்கள் - யானைகள் இடையேயான மோதல் செய்தியாக வெளியாகாத நாட்களே இல்லை என்று கூறிவிடலாம்.
நிலத்தில் வாழும் மிகப் பெரிய விலங்கான யானைகளைப் புரிந்துகொண்டால் மனிதர்கள் - யானைகள் மோதல் தவிர்க்கப்பட்டு மனிதர்கள் - யானைகள் இடையே சகவாழ்வு சாத்தியம். அப்படி மனிதர்கள் - யானைகள் சகவாழ்வுக் காட்சி அஸ்ஸாம் மாநிலம் கோலாகாட் மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோவில், காட்டுப் பகுதியில் 2 பெண்கள் தங்கள் வீட்டில் நெசவு செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் வீட்டு அருகே காட்டு யானைகள் கூட்டமாக செல்கின்றன. ஆனால், அந்த பெண்கள் எந்த அச்சமும் இல்லாமல் தங்கள் வேலையை மிகவும் இயல்பாக செய்துகொண்டிருக்கிறார்கள். அந்த காட்டு யானைகளும் அவற்றின் போக்கில் நடந்து செல்கின்றன.
இதுவே தமிழ்நாடாக இருந்திருந்தால், காட்டு யானைக் கூட்டத்தைப் பார்த்ததும் பதற்றமாகி, மக்கள் கூட்டமாகத் திரண்டு கூச்சலிட்டு விரட்டி இருப்பார்கள். பிறகு, யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் என்று கூறியிருப்பார்கள்.
ஆனால், அஸ்ஸாமில் கோலாகாட் மாவட்டத்தில் அப்படி இல்லை. மனிதர்கள் - யானைகள் இடையே சகவாழ்வு சாத்தியமாகி இருக்கிறது.
Golaghat district, Assam, is a unique example of human-elephant coexistence, where communities and conservation efforts work to protect both lives and livelihoods. By promoting eco-tourism, we can foster harmony between people and these majestic giants. #Assam #Elephants pic.twitter.com/XIUdK4kQqX
— Firoz Hussain (@twitfiroz) November 10, 2024
இந்த வீடியோவை இயற்கை ஆர்வலர் ஃபைரோஸ் ஹுசைன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ குறித்து ஃபைரோஸ் ஹுசைன் குறிப்பிடுகையில், “அஸ்ஸாம் மாநிலம், கோலாகாட் மாவட்டம், மனித-யானை சகவாழ்வுக்கு ஒரு தனித்துவமான உதாரணம் ஆகும், அங்கே சமூகங்கள் மற்றும் பாதுகாப்பு முயற்சிகள், உயிர்கள் மற்றும் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்க வேலை செய்கின்றன. சுற்றுச்சூழல் சுற்றுலாவை ஊக்குவிப்பதன் மூலம், மக்களுக்கும் இந்த கம்பீரமான ராட்சதர்களுக்கும் இடையே நல்லிணக்கத்தை வளர்க்க முடியும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
Golaghat Assam 🐘
— Supriya Sahu IAS (@supriyasahuias) November 11, 2024
Communities and conservation #elephants #Elephants #Conservation
video credits @twitfiroz pic.twitter.com/Y1ArDWI9x5
இந்த வீடியோவை ஐ.ஏ.எஸ் அதிகாரி சுப்ரியா சாஹு தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். “அஸ்ஸாம், கோலாகாட், சமூகங்கள் மற்றும் பாதுகாப்பு” என்று தலைப்பிட்டு வீடியோவிஅப் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோ குறித்து ஒரு எக்ஸ் பயனர் கருத்து தெரிவிக்கையில், “சுற்றுச்சூழல் சமநிலையை நிலைநிறுத்துவதில் சமூகத்தின் பங்களிப்புக்கு சிறந்த உதாரணம், மேடம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு பயனர், “இது அருமை! யானைகளுக்காக சமூகங்கள் ஒன்றிணைந்து செயல்படுவது ஒரு நேர்மறையான நடவடிக்கையாகும். பாதுகாப்பை செயலில் பார்க்க விரும்புகிறேன்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
மூன்றாவது பயனர், “அருமை மேடம். தென் மாநிலங்களிலும் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.