நீலகிரி: ரயில் ஏற நடை மேடைக்கு குட்டியுடன் வந்த யானை!

நீலகிரி ஹில்குரோவ் ரயில் நிலையம் அருகே யானைகள் கூட்டமாக சுற்றி வருவதாக ரயில்வே ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

நீலகிரி ஹில்குரோவ் ரயில் நிலையம் அருகே யானைகள் கூட்டமாக சுற்றி வருவதாக ரயில்வே ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

author-image
WebDesk
New Update
Wild elephants roam the Nilgiri railway stations

நீலகிரி மாவட்டம் ஹில்குரோவ் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் தாய் யானை இரண்டு குட்டிகளுடன் நடை மேடைக்கு வந்தது.

நீலகிரி மாவட்டத்தில் தற்போது இரண்டாவது சீசன் நடப்பதால் பல்வேறு வனம் சார்ந்த பகுதிகளிலும் பலா, வாழை, மூங்கில் உள்ளிட்டவை விளைந்து காணப்படுகின்றன.
இவற்றை உண்பதற்காக யானைகள் இப்பகுதியில் கடந்த சில நாள்களாக சுற்றிவருகின்றன.

Advertisment

இந்த நிலையில், நீலகிரி ஹில்குரோவ் ரயில் நிலையம் அருகே யானைகள் கூட்டமாக சுற்றி வருவதாக ரயில்வே ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் மலை ரயில் சத்தம் கேட்டால் இவை அருகில் உள்ள வனப்பகுதிக்கு சென்று விடுவதாகவும், மிகவும் சாந்தமாக உலாவரும் இந்த யானைகளுக்கு தேவையான உணவு கிடைப்பதால் இவை கடந்த சில நாட்களாக இப்பகுதியிலேயே முகாமிட்டிருப்பதாக இப்பகுதி மக்கள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisment
Advertisements

இந்நிலையில் நீலகிரி மாவட்டம் ஹில்குரோவ் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் தாய் யானை இரண்டு குட்டிகளுடன் நடை மேடைக்கு வந்தது. இதனை பலரும் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகிவருகின்றன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: