viral video: வனவிலங்குகளில் வேட்டையாடுவதில் வலிமையான விலங்கு எது என்றால் அனைவரும் முதலில் சிங்கம் என்றுதான் கூறுவார்கள். ஆனால், சிங்கங்களுக்கே டஃப் கொடுத்திருக்கிறது ஒரு காட்டு மாடு. சுற்றி வளைத்தாலும் சிங்கங்களைத் தாண்டி சீறிப் பாய்ந்த காட்டு மாடு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
சமூக ஊடகங்கள் கோலோச்சும் காலத்தில், தினமும் ஆயிரக் கணக்கான வீடியோக்கள் சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது. அவற்றில் பெரும்பாலான வீடியோக்கள் வனவிலங்குகளை பற்றிய அறிய விடியோக்களாகும்.
வனவிலங்குகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஐ.எஃப்.எஸ் அதிகாரிகள் சமூக ஊடகங்களில் வனவிலங்குகளின் வீடியோ புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றன.
அந்த வகையில், ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்தா நந்தா, ட்விட்டரில் பதிவிட்டுள்ள வீடியோவில், காட்டில் ஒரு குளத்தின் அருகே சிங்கங்கள் காட்டு மாடு ஒன்றை தாக்குவதற்கு குறிவைத்து சுற்றி வளைக்கின்றன. காட்டு மாடு அவ்வளவுதான் சிக்கியது என்று பரிதாபப்படும் நேரத்தில் அந்த காட்டு சிங்கங்களே எத்ர்பாக்காத வகையில் ஒரே தாவு என சீறிப் பாய்ந்து சிங்கங்களிடம் அகப்படாமல் தாவிச் செல்கிறது.
சிங்களை விஞ்சி தாவிக் குதித்து சிங்கங்களிடம் தப்பிய இந்த காட்டு மாட்டு வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வருகிறது. இந்த வீடியோப் பார்ப்பவர்கள் எல்லாரும், காட்டு மாடு சிங்கங்களைத் தாண்டி குதிப்பதைப் பார்த்து ஆச்சரியப்படுவருகின்றனர். இந்த காட்டு மாட்டின் பாய்ச்சல் எப்படி இருக்கிறது நீங்களே பாருங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”