பாம்பு குளியல்: பாருங்க… வீட்டில டிரை பண்ணாதீங்க!

கோடை காலம்.. நல்ல குளியலை யார் தான் விரும்பமாட்டார்கள். இருப்பினும் தயவுசெய்து நீங்கள் முயற்சி செய்ய வேண்டாம்.

By: Updated: May 25, 2020, 06:34:38 PM

வங்கக்கடலில் உருவான உம்பன் புயல் காரணமாக இந்தியாவின் தென் மாநிலங்களில் கடுமையான அனல் காற்று வீசி வருகிறது. 40 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகி வருவதால் பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்குமாறும் வானிலை மையமும் அறிவுறுத்திவருகிறது.

இந்நிலையில், நாகப்பாம்பு ஒன்றின் தலையில் தண்ணீர் ஊற்றி அதன் வெப்பத்தைத் தணிக்கும் வீடியோ ஒன்று சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது. பாம்பு என்ற பெயரைக் கேட்டாலே, நம் மனம் படபடக்கும். ஆனால், இந்த வீடியோவில் அந்த நபர் அவ்வளவு பெரிய நாகப்பாம்பை கை குழந்தையை போல் குளிப்பாட்டுகிறார்.

சுசந்தா நந்தா என்ற வனத்துறை அதிகாரி தனது ட்விட்டரில் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.மேலும், கோடை காலம்.. நல்ல குளியலை யார் தான் விரும்பமாட்டார்கள். ஆபத்தானது. தயவுசெய்து நீங்கள் முயற்சி செய்ய வேண்டாம்” என்று தெரிவித்தார்.

இருப்பினும், வீடியோவில் காணப்படும் அந்த நபர், காட்டுயிர் பாதுகாவலரும்,  பாம்பு நிபுணருமான வவா சுரேஷ் என்று நெட்டிசன்கள் விரைவாக அடையாளம் கண்டனர்.

எனவே, நாமும் வனவிலங்கு அதிலும் குறிப்பாக பாம்புகளை குளிப்பாட்ட விரும்பினால் நிபுணர்களின் உதவியை நாடவேண்டும்.

 

வெப்பச்சலனம்:

தமிழகத்தில் மதுரை, திருச்சி, கரூர், ஈரோடு, வேலூர் ஆகிய 5 மாவட்டங்களில் அனல் காற்று வீசக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மாவட்டங்களில் அதிகபட்சமாக 40 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது. அனல் காற்று வீசும் என்பதால் பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்குமாறும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

அதே நேரத்தில், வெப்பச்சலனம் காரணமாக 19 மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Latest News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Wildlife conservationist and snake expert vava suresh bathing king cobra

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X