scorecardresearch

‘காதல் பைத்தியகாரத்தனமான செயல்களை செய்ய வைக்கும்’ – வில் ஸ்மித் மன்னிப்பு

ஆஸ்கர் மேடையில் மனைவியை கிண்டல் செய்த தொகுப்பாளர் கிறிஸ் ராக்கை கன்னத்தில் அறைந்த சம்பவத்திற்கு, மேடையில் நடிகர் வில் ஸ்மித் மன்னிப்பு கேட்டார்.

‘காதல் பைத்தியகாரத்தனமான செயல்களை செய்ய வைக்கும்’ – வில் ஸ்மித் மன்னிப்பு

94-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. அப்போது, நிகழ்ச்சி தொகுப்பாளர் கிறிஸ் ராக் மற்றும் நடிகர் வில் ஸ்மித் இடையில் நடந்த சம்பவம் பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

வில் ஸ்மித்தின் மனைவியான நடிகை ஜடா பிங்கெட் ஸ்மித்தின் ஹேர்ஸ்டைல் குறித்து நகைச்சுவையாக பேசிய கிறிஸ் ராக், ஜி.ஐ-யின் அடுத்த பாகம் குறித்து ஆவலோடு காத்திருப்பதாக தெரிவித்தார்.

முதலில் கிறிஸ் ராக் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்த வில் ஸ்மித், திடீரென இருக்கையில் இருந்து எழுந்து, நேராக கிறிஸ் ராக் நோக்கி நடந்து சென்றார். பக்கத்தில் சென்ற அவர், யாரும் எதிர்பாராத வகையில் அவரது கன்னத்தில் அறைந்தார். அதையும் நகைச்சுவையாக எடுத்துக்கொண்ட கிறிஸ் ராக், “ஓ.அருமை அருமை, பட் நண்பா. அது ஒரு ஜி.ஐ. ஜேன் ஜோக் என கூறியதும், பார்வையாளர்களும் சிரிக்கத்தொடங்கினர். 1997 இல் வெளியான ஜி.ஐ. ஜேன் அதில் டெமி மூர் தலையை மொட்டையடித்திருந்ததை தான், கிறிஸ் ராக் குறிப்பிட்டிருந்தார்.

கிங் ரிச்சர்டுக்கு சிறந்த நடிகருக்கான விருதை வென்ற ஸ்மித், என் மனைவியின் பெயரை சொல்வதை நிறுத்திவிடுங்கள் என ராக்-க்கு எச்சரிக்கை விடுத்தார். அதற்கு பதிலளித்த ராக், நான் போகிறேன். இது தொலைக்காட்சி வரலாற்றில் மிகச்சிறந்த இரவு” என்றார்.

கடந்த ஆண்டு டிசம்பரில், ஜடா பிங்கெட் ஸ்மித் பில்போர்டிடம், முடி உதிர்தல் மற்றும் வழுக்கையை ஏற்படுத்தும் அலோபீசியாவுடன் போராடி வருவதாக தெரிவித்துள்ளார்.

கிறிஸ் ராக்கை வில் ஸ்மித் அறைந்த காட்சியை சமூகவலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். ட்விட்டரில் விவாதம் தொடங்கியுள்ளது. ஒரு சிலர் ஸ்மித் மனைவி மீது வைத்திருக்கும் பாசத்தை பாராட்டினாலும், சில ஸ்மித்தின் நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது. அவரது ரசிகராக இருப்பதை நிறுத்த போகிறேன் என கருத்துகளை பதிவிடுகின்றனர். மீம்ஸ் மழையில் ட்விட்டர் தத்தளித்துக்கொண்டிருக்கிறது.

இச்சம்பவத்திற்கு பிறகு, தொகுப்பாளர் டேனியல் கலுயா ஸ்மித்தை கட்டிப்பிடித்தார். தொடர்ந்து, ன்சல் வாஷிங்டன் அவரை மேடையின் பக்கத்திற்கு அழைத்துச் சென்றார்.

இதைத் தொடர்ந்து, ஆஸ்கர் விருதை பெற்றுக்கொண்ட பிறகு பேசிய வில் ஸ்மித், ஆஸ்கர் அகாடமியிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். எனது சக நண்பர்களிடமும் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். ரிச்சர்ட் வில்லியம்ஸைப் பற்றி அவர்கள் கூறியது போல் நான் பைத்தியக்கார தந்தையைப் போல் இருக்கிறேன். காதல் உங்களை பைத்தியக்காரத்தனமான செயல்களைச் செய்ய வைக்கும்

மக்களை நேசிக்கவும், மக்களைப் பாதுகாக்கவும், பயணம் செய்யும் ஒரு நதியாக இருக்கவும் என் வாழ்க்கையில் விரும்புகிறேன். நாம் அனைவரும் என்ன செய்து கொண்டிருக்கிறோமோ அதையே எனக்கும் செய்யத் தெரிகிறது. மக்கள் உங்களைப் பற்றி பைத்தியமாக பேசுவதற்காக நீங்கள் நடிக்க வேண்டும். இந்த தொழிலில் உங்களை அவமரியாதை செய்யும் நபர்களும் இருக்க வேண்டும். அப்படி நடந்தால் மட்டுமே நீங்கள் சிரிக்க முடியும். இது தான் நமது தொழிலின் முன் உள்ள சவால். நம்மை போன்றவர்கள் இதனை கடந்து செல்ல வேண்டும்” என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Will smith slaps chris rock during oscars