ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித், திரைப்படங்களில் நடிப்பதை விட இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் மிகவும் பிஸியாக உள்ளார்.
ஹாலிவுட் வட்டாரத்தில் உச்ச நடிகராக இருந்தவர் வில் ஸ்மித். இவரது ஒரே மகன் ஜேடன் ஸ்மித் ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். தனது மகனை திரைத்துறைக்கு அனுப்பி விட்டு வில் ஸ்மித் இளைஞர்களின் உயிர் நாடியாக திகழும் சோஷியல் மீடியாவை கையில் எடுத்துள்ளார்.
47 வயதாகும் வில் ஸ்மித்க்கு இன்ஸாகிராமில் 8 மில்லியன் ஃபாலோவர்ஸ். அவர் பதிவிடும் வீடியோக்கள், ஃபோட்டோக்கள் குறைந்தது 5 மில்லியன் பார்வையாளர்ளால் பார்க்கப்பட்டு விடும். அப்படி அவர் என்னத்தான் பதிவிடுகிறார்? என்பது தான் ஆச்சரியத்திற்குரிய கேள்வி. மிருங்களுடன் அவர் நடத்தும் லூட்டிகள், உரையாடல்கள் என மினி வைல்ட் லைவ்ஃப் ஜூவையே இன்ஸ்டாகிராமில் நடத்தி வருகிறார் வில் ஸ்மித். மிருகங்களை வைத்து மனிதர்களை சிரிக்க வைப்பது இதுதான் அவருடைய லெடஸ்ட் கான்ஸஃப்ட்.
ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள புகழ்பெற்ற மிருககாட்சிகளுக்கு சென்று, அங்குள்ள விலங்குகளுடன் செல்ஃபி எடுப்பது, அதை வெறுப்பு ஏத்துவது போன்ற செயல்களின் ஈடுபடும் வில் ஸ்மித், இந்த செயலை வைத்தே சிறு குழந்தைகளுக்கு அட்வைஸும் கொடுக்கிறார். எந்த ஒரு செயலையும் ஆய்வுக்கு உட்படுத்தினால் தான் உண்மை பலன் கிடைக்கும் என்று, தனது எல்லா வீடியோக்களிலும் சொல்லும் ஸ்மித், அதை நிரூப்பிக்க செய்யும் சேட்டைகள் ஏராளம். இரவில் வரும் மூட்டை பூச்சிகளுடன் சண்டை ஈடுவது, முதலையை ஏமாற்ற முயல்வது என வில் ஸ்மித் வீடியோக்கள் எல்லாமே வைரல் ரகம் தான்.
இன்ஸ்டாகிராம் மட்டும் அல்லாமல், யூடூயூப்பிலும் தனியாக சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இதில் அவர் கண்டு வியந்த மூத்த நடிகர்கள் பற்றி பகிர்ந்து கொள்வது, மறக்க முடியாத திரைப்படங்கள் குறித்த சுவாரசியமான நிகழ்வுகளை பகிர்ந்து கொள்வது என வாரந்தோறும் ஒரு வீடியோவை வெளியிட்டு வருகிறார். இதில் அவரை 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பின் தொடர்கிறார்கள். பெரிய திரையில் ஸ்மித்தை காண முடியவில்லை என்று புலம்பும் தமிழ் ரசிகர்களுக்கும் அவர் சொல்லும் ஒரே பதில், ” நான் ரொம்ப பிஸி”