அமெரிக்காவில் மேயர் பதவியேற்ற ஏழு மாதக் குழந்தை 'சார்லி'

அமெரிக்கா தனது வரலாற்றிலே ஒரு கடினமான நேரத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது, மேயர் சார்லி சமாதானத்தையும் தயவையும் மீண்டும் சமூகத்தில் கொண்டு வர உதவுவார்/உதவுகிறார்

அமெரிக்கா தனது வரலாற்றிலே ஒரு கடினமான நேரத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது, மேயர் சார்லி சமாதானத்தையும் தயவையும் மீண்டும் சமூகத்தில் கொண்டு வர உதவுவார்/உதவுகிறார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
அமெரிக்காவில் மேயர் பதவியேற்ற ஏழு மாதக் குழந்தை 'சார்லி'

நீங்கள் நம்பினாலும் சரி, நம்பாவிட்டாலும் சரி ஏழு மாதக்  குழந்தையான வில்லியம் சார்லஸ் “சார்லி” ,டெக்சாஸில் இருக்கும் வைட்ஹால் மேயராக பதவியேற்றார். இதன்மூலம், அமெரிக்காவின் மிக இளைய மேயராக உருவெடுத்துள்ளார்.

Advertisment

சி.ஏ.ஏ-க்கு எதிராக தமிழகம் முழுவதும் வலுக்கும் போராட்டம்...

"அமெரிக்காவை மீண்டும் மனிதத் தன்மையோடு  உருவாக்குங்கள்" என்ற குறிக்கோளுடன் மேயர் பதவியை எற்றுக்கிறார் இந்த சார்லஸ் சார்லி.

Advertisment
Advertisements

இது எப்படி சாத்தியம் என்று நீங்கள் யோசனை செய்கின்றீர்களா ?

உள்ளூர் தொலைக்காட்சி சேனலான கேபிடிஎக்ஸ் தகவலின் படி, ஒவ்வொரு ஆண்டும் வைட்ஹாலின் மேயர் பதவியைத்   தன்னார்வ தீயணைப்புத் துறை நிதி திரட்டல்களுக்காக ஏலம் விடுகிறது. இந்த ஆண்டு, அந்த பதவியை சார்லி அதிக விலைக்கு ஏலம் எடுத்திருக்கிறார். எனவே, அமெரிக்காவின் இளைய மேயராக மக்களும் அவரை கொண்டாடி மகிழ்கின்றனர்.

மேயர் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட ஒருவர் இதுகுறித்து கூறுகையில், "எல்லோரும் அவரின் கையைப் பிடித்து அவருடன் சுற்றி நடக்க விரும்பினார்கள்,அந்த தருணத்தில் எங்களுக்குள் அன்பு மிகவும் வலுவாக இருந்ததாக நாங்கள் உணர்ந்தோம். அமெரிக்கா தனது வரலாற்றிலே ஒரு கடினமான நேரத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது, மேயர் சார்லி சமாதானத்தையும் தயவையும் மீண்டும் சமூகத்தில் கொண்டு வர உதவுவார்/உதவுகிறார். அதுவே முழு குறிக்கோள் ” என்று கூறினார்

 

லிட்டில் சார்லி பதவிப் பிரமாணம் மக்களை இன்னும் நெகிழவைத்தது . "நான், வில்லியம் சார்லஸ் மக்மில்லன், நான் வைட்ஹால் மேயரின் பதவியை உண்மையாக நிறைவேற்றுவேன், என் திறனுக்கு ஏற்றவாறு செய்வேன் என்று உறுதியளிக்கிறேன்: விளையாட்டு மைதானத்தில் உள்ள அனைவரிடமும் கருணை காட்டுங்கள், குழந்தைகள் தத்தெடுப்பை ஊக்கப்படுத்துங்கள், தூய்மையான வாழ்க்கை, அனைத்து சரளை சாலைகளையும் அமைக்கவும், உங்களது மிட்டாய்களை தன்னார்வ தீயணைப்புத் துறைக்கு கொடுங்கள், வைட்ஹால் சமூகத்தைப் பாதுகாக்கவும், பாதுகாக்கவும், பாதுகாக்கவும், ”என்று உறுதிமொழி எதுத்துள்ளார்.

United States Of America America

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: