New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/10/rakul-preet-singh-starts-shooting-for-suriyas-ngk-photos-pictures-stills-6.jpg)
twitter video viral
பாராகிளைடிங் அனுபவத்தை அப்படியே ரசிக்க வேண்டும் என்பதற்காக பைலட் துணையுடன்
twitter video viral
twitter video viral : சாகசப் பிரியர்களின் விருப்பமான பொழுதுபோக்கில் ‘பாராகிளைடிங்’ கண்டிப்பாக இடம் பிடித்திருக்கும். இந்தியாவில் இந்த விளையாட்டு தற்போது பிரபலமாகி வருகிறது. சுற்றுலாப் பயணிகளை கவரும் வண்ணம் மலைப்பிரதேசங்களில் இந்த சாகச விளையாட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் 70 வயது மூதாட்டி ஒருவருக்கு பாராகிளைடிங் செய்ய வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாக இருந்துள்ளது. டேனிஷ் நகரத்தை சேர்ந்த இவர், துருக்கியை சுற்றிப்பார்க்க சுற்றுலா வந்தார். அப்போது அங்கு மிகவும் பிரபலமான பாராகிளைடிங் சாகத்தில் ஈடுப்பட்டார். பாராகிளைடிங் அனுபவத்தை அப்படியே ரசிக்க வேண்டும் என்பதற்காக பைலட் துணையுடன் அவர் ஈடுப்பட்டார்.
அப்போது தான் அந்த துர் சம்பவம் நிகழ்ந்தது. இவர்கள் சென்ற பாராகிளைடிங் கம்பி திடீரென்று காற்று மாறும் திசையில் சிக்கிக் கொள்ள இருவரும் கீழே விழும் நிலை ஏற்பட்டது. உடனே விபத்தை புரிந்துக் கொண்ட பைலட் பாராசூட்டை பயன்படுத்தி தரையிறங்க முயற்சி செய்தார். இருவரும் பத்திரமாக பாராசூட்டின் உதவியால் கடலில் தரையிறங்கினர்.
Danish paraglider's parachute snaps mid-air. The tourist and her pilot make emergency landing in the sea pic.twitter.com/OGLnpBCqtQ
— Reuters India (@ReutersIndia) October 2, 2019
பைலட்டின் புத்திசாலித்தனத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அந்த மூதாட்டிக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.