முஸ்லீம் நபர்களின் வேலையில் எனக்கு நம்பிக்கை இல்லை.. பெண்ணின் பேச்சை கேட்டு ஏர்டெல் செய்த செயல்!

அவரிடம் பேசிய வாடிக்கையாளர் பிரநிதியின் கஸ்டமர் நம்பரையும் பூஜா குறிப்பிட்டிருந்தார்.

முஸ்லீம் நபரின் வேலையில் நம்பிக்கை இல்லை என்று கூறிய பெண்ணிற்காக ஏர்டெல் நிறுவனம், இந்து ஊழியரை நியமித்த செயல் பல்வேறு விமர்சனங்கள் மற்றும் கண்டனங்களை எழுப்பியுள்ளது.

பூஜா சிங் என்ற பெண் ஒருவர், தனது ட்விட்டர் பக்கத்தில் இரண்டு தினங்களுக்கு முன்பு ஏர்டெல் சேவை குறித்து கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் ”சமீபத்தில் நான் ஏர்டெல் டிடிஎச் மறுஇணைப்புக்காக வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு கொண்டிருந்தேன். அப்போது என்னுடன் ஃபோனில் பேசிய நபரின் பேச்சு மிகவும் தவறாக இருந்தது. வாடிக்கையாளர் சேவையில் ஏர்டெல் நிறுவனம் மிகவும் மோசமாக உள்ளது” என்றும் தெரிவித்திருந்தார். கூடவே அவரிடம் பேசிய வாடிக்கையாளர் பிரநிதியின் கஸ்டமர் நம்பரையும் பூஜா குறிப்பிட்டிருந்தார்.

பூஜாவின் இந்த பதிவைப் பார்த்த ஏர்டெல் பிரநிதி ஒருவர் தனது நிறுவனத்திற்காக மிகவும் கனிவுடன் அவருக்கு பதில் ஒன்றை தெரிவித்திருந்தார். அதில், “உடனடியாக இது போன்ற விஷயத்தை எங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்ததற்கு நன்றி. உடனடியாக நடவடிக்கை எடுக்கிறோம்” என்று கூறிவிட்டு இறுதியாக தனது பெயரை ஷோயப் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு அந்த பெண், “ஷோயப் நீங்கள் ஒரு முஸ்லீமா? உங்களின் வேலையின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. ஏர்டெல் நிறுவனம் எனக்கு ஒரு இந்து ஊழியரை நியமித்தால் நன்றாக இருக்கும்” என்று கூறினார். பூஜாவின் இந்த கருத்திற்கு நெட்டிசன்கள் பலரும் கொட்தித்து எழ்ந்தனர். முஸ்லீம் நபர்களின் வேலையில் நம்பிக்கை இல்லை என்று எதைவைத்து வைத்து கூறுவீர்கள் என்றும் பூஜாவிடம் கேள்விகள் எழுப்பட்டன.

இந்நிலையில், ஏர்டெல் நிறுவனம் பூஜாவின் கோரிக்கையை ஏற்று அவரின், பிரச்சனையை சரிசெய்ய இந்து ஊழியரை நியமித்துள்ளது. இதை ஏர்டெல் நிறுவனம் தனது ட்விட்டரில் தெரியப்படுத்தியுள்ளது. ஏர்டெல்லின் இந்த வெட்ககேடான செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. ஒரு பெண்ணின் கீழ்தரமான செயலுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக ஏர்டெல் நிறுவனம் நடந்துக் கொண்டது மிகவும் தவறானது என்றும், மாற்ற வேண்டியது அந்த பெண்ணை மட்டுமில்லை.. ஏர்டெல் நிறுவனத்தையும் தான் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். சமூகவலைத்தளங்களில் இதுக் குறித்த உரையாடல்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

×Close
×Close