New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/07/snake-catch-girl.jpg)
பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள், ஆனால், ஒரு பெண் துணிச்சலாக வெறும் கையால் ஆள் உயரப் பாம்பை சாதாரணமாக மடக்கிப் பிடித்த வீடியோ வைரலாகி வருகிறது.
பாம்பு என்றாலே முதலில் எல்லோருக்கும் ஏற்படுவது அச்ச உணர்வுதான். அதற்கு காரணம் பாம்பு கடித்தால் உடலில் விஷம் பரவி இறந்துவிடுவோம் என்ற அச்ச உணர்வு என்பதைவிட, நீளமாக வழுவழுப்பாக பார்க்கும்போதே ஒரு அசூயை ஏற்படுத்தும் அதன் தோற்றம்தான் அச்சம் கொள்ள வைக்கிறது. அதனால்தான், பாம்பு என்றால் படையும் நடுங்குகிறது.
அதனாலேயே, பலரும் பாம்பு என்றால் பயப்படுகிறார்கள். ஆனால், பெண் ஒருவர் மிகவும் துணிச்சலாக ஆள் உயரப் பாம்பை மிகவும் சாதாரணமாக வெறும் கையால் மடக்கிப்பிடித்துள்ளார்.
ஒரு பெண் நீளமான ஆள் உயரப் பெரிய பாம்பை வெறும் கைகளால் பிடிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ வியட்நாமில் பதிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது.
இந்த பெண் வெறும் கைகளால் பாம்பை பிடிக்க முற்பட்டதை அங்கிருந்த சிலர் தமது செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் பதிவிட்டனர். இதையடுத்து, அந்த வீடியொ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில், அந்தப் பெண் துடிக்கும் மிகப் பெரிய ஆள் உயரப் பாம்பை மடக்கிப் பிடிக்கிறார். ஆனால், அந்த பாம்பு துடித்து பெண்ணிடம் இருந்து தப்ப முயற்சி செய்கிறது. ஆனாலும், அந்தப் பெண் அதை விடாமல் மடக்கிப் பிடித்து எடுத்து செல்கிறார்.
ஆள் உயரப் பாம்பை ரொம்ப சாதாரணமாக துணிச்சலாக வெறும் கையால் மடக்கிப் பிடித்த அந்த பெண், அந்த பெண் முகக்கவசம் மற்றும் ஹெல்மெட் அணிந்திருந்ததால் அவரது முகம் தெரியவில்லை. ஆனாலும், அந்த பெண் எந்தவிதமான பாதுகாப்புக் கருவிகளும் இல்லாமல் ஒரு பெரிய பாம்பைப் பிடித்து சாலையில் நடந்து செல்வதும் அந்த பாம்பு அவருடிய உடலைச் சுற்றி வளைப்பதையும் பார்க்கும்போது பலரையும் உடல் சிலிர்க்க வைப்பதாக உள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.