கோவையில் பெண் மீது லாரி மோதி சக்கரம் ஏறி இறங்கி பரிதாபமாக உயிரிழந்த சிசிடிவி வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் சூலூரில் நடந்து சென்று கொண்டிருந்த வயதான பெண்மணி மீது சிமெண்ட் ஏற்றி வந்த லாரி மோதி சம்பவ இடத்திலேயே மூதாட்டி உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை, சூலூர் மார்க்கெட் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி, இவருடைய மனைவி கமலா வயது 52. இவர் கடைக்கு செல்வதற்காக சூலூர் மார்க்கெட் ரோடு பகுதியில் நடந்து வந்து கொண்டு இருந்து இருக்கிறார். அப்போது அந்த பகுதியில் சிமெண்ட் பல்பு லாரி நின்று கொண்டு இருந்து உள்ளது. லாரி நின்று கொண்டு தானே இருக்கிறது என கமலா லாரிக்கு முன் ஓரமாக நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது திடீரென இந்த லாரி டிரைவர் லாரியை இயக்க ஆரம்பித்தார் லாரியின் முன்புறம் நடந்து சென்றுகொண்டிருந்த கமலாவை கவனிக்காத லாரி டிரைவர் தொடர்ந்து லாரியை இயக்கியதால் நடந்து சென்ற கமலாவின் மீது லாரியின் முன் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் கமலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக லாரி டிரைவரை மாணிக்கம் என்பவரை கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் இது தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் தற்போது வயது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.