டெல்லி மெட்ரோ ரயிலில் காலை மாலை இரவு வேளைகளில் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்த நிலையில் பெண் பயணி ஒருவர் மஞ்சள் நிற புடவை அணிந்து கொண்டு சந்திரமுகி போன்று வேடமிட்டு அங்குள் பயணிகளை பயமுறுத்தினார்.
Advertisment
இதைப் பார்த்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயத்தில் நெளித்தனர். இளைஞர் ஒருவரை சந்திரமுகி வேடமிட்ட பெண் மிரட்டி எழும்ப வைத்தார்.
இந்தக் காட்சிகளை அங்கிருந்தவர்கள் தங்களின் செல்போனில் வீடியோவாக படம் பிடித்தனர். மேலும் இந்த காணொலிகள் சில மணித்துளிகளில் காட்டுத் தீப் போல் பரவ ஆரம்பித்தன. பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கின. பலரும் இந்த வீடியோ காட்சிகளை பதிவிட்டு நொய்டா மற்றும் டெல்லி போலீசை டேக் செய்துள்ளனர்.
எனினும் இந்த விவகாரத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் சந்திரமுகி வேடத்தில் ஏறிய பெண் யார், அவருடன் வேறு யாரேனும் வந்தார்களா என்பது குறித்த தகவல்களும் வெளியாகவில்லை. சம்பந்தப்பட்ட வீடியோ நொய்டா செக்டர் 148 மெட்ரோ நிலையத்திற்கு அருகில் உள்ள நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா இடையே படமாக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
இந்த குறிப்பிட்ட சில வீடியோ காட்சிகள் காட்டுத் தீப் போல பரவிய நிலையில் இது விளம்பர படம் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/