By: WebDesk
Updated: September 14, 2020, 01:27:22 PM
Woman in Michigan receives postcard mailed in 1920. Check what was written on it : மிச்சிகனை சேர்ந்த கீச் என்ற பெண்ணுக்கு 1920-ல் எழுதப்பட்ட கடிதம் ஒன்று விநியோகிக்கப்பட்டுள்ளது. சில நேரங்களில் நமக்கு கடிதங்கள், மணி ஆர்டர்கள் மிகவும் தாமதமாக வருவது வழக்கமான ஒன்றாகும். ஆனால் ஒரு நூறு வருடங்கள் கழித்த் வருவது என்பதெல்லாம் கொஞ்சம் வருத்தத்தை தான் தருகிறது.
ப்ரிட்டனி கீச் என்பவர் தன்னுடைய சமூக வலைதள பக்கம் ஒன்றில், தனக்கு ஒரு லெட்டர் கிடைத்துள்ளதாகவும், அதன் முகவரியில் முதல் பெயர் இல்லை என்றும், சரியான நபர்களிடம் கடிதத்தை ஒப்படைக்க உதவுங்கள் என்றும் கூறியுள்ளார். அதில் ”ஒரு கருப்பு நிற பூனை ஒரு ப்ரூமுடன் நிற்கிறது. மேலும் ஒரு வௌவ்வால், ஆந்தை ஆகியவையும், ஒரு பெண் கையில் கட்டையுடன் தலையில் தொப்பி அணிந்தபடி உள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த கடிதம் அக்டோபர் மாதம் 29ம் தேதி, 1920ம் ஆண்டு எழுதப்பட்டுள்ளது.
பாஸிட்டிவ்லி பெல்டிங் என்ற முகநூல் பக்கத்தில் அந்த கடிதத்தின் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதில் மேலும் “நீங்கள் அனைவரும் நலமாக இருக்கின்றீர்கள் என்று நம்புகின்றேன். அம்மாவிற்கு முட்டுவலி. இங்கு மிகவும் குளிரும் பனியுமாக இருக்கிறது. வரலாறு பாடத்தை முடித்துவிட்டு நான் தூங்கப் போகின்றேன். தாத்தாவும் பாட்டியும் நன்றாக இருக்கிறார்கள் என்று நம்புகின்றேன்” என்று தன்னுடைய கசின்களுக்கு கடிதம் எழுதிய நபர் அதில் குறிப்பிட்டுள்ளார். 100 வருடங்கள் கழித்து சரியானவர்கள் கையில் இந்த கடிதம் போய் சேருமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்!
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook
Web Title:Woman in michigan receives postcard mailed in 1920 check what was written on it