தமிழகப் பெண் ஒருவர் மாவரைப்பதற்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சைக்கிள் கிரைண்டரில் சைக்கிள் மிதித்து மாவரைக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் வைரலாகி வருகிறது.
கிரைண்டர், மிக்ஸி, போன்ற கருவிகள் நம்முடைய வீட்டு வேலைகளை சுலபமாக்கி விட்டது என்றாலும் வேலை செய்யாததால் அதற்கு பதிலாக பலரும் ஜிம்முக்கு சென்று கட்டணம் செலுத்தி உடற்பயிற்சி செய்து உழைத்துக்கொண்டிருக்கிறோம். இப்படி நம்முடைய வசதிக்கு கண்டுபிடிக்கப்பட்ட கருவிகள் நாம் உழைப்பதை தடுத்துவிட்டது துரதிருஷ்டவசமானது.
இந்த விஷயத்தை யோசித்த யாரோ ஒரு இளைஞர் சைக்கிளை அடிப்படையாகக் கொண்டு பிரத்யேக மாவரைக்கும் கிரைண்டரை வடிவமைத்துள்ளார். இந்த சைக்கிள் கிரைண்டரில் அரிசியைப் போட்டுவிட்டு ஏரி சைக்கிள் பெடல்களை மிதித்தால் கிரைண்டர் வேகமாக சுற்றி மாவரைக்கிறது.
இந்த வீடியோவில் சைக்கிள் மிதித்து மாவரைக்கும் பெண் மிகவும் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் சைக்கிள் மிதித்து மாவரைக்கிறார். இந்த வீடியோ ஃபேஸ்புக்கில் பலராலும் பகிரப்பட்டு பரவி வருகிறது.
சைக்கிள் மிதித்து மாவரைக்கும் பெண்ணுக்கு ஏன் இவ்வளவு மகிழ்ச்சி என்ற கேள்வி எழலாம். இந்த சைக்கிள் கிரைண்டரைப் பயன்படுத்தி மாவரைத்தால் கரண்ட் பில், ஜிம் ஃபீஸ் எல்லாம் மிச்சமாகும்போது சந்தோஷம் வரத்தானே செய்யும்.
சைக்கிள் கிரைண்டரில் மாவரைப்பது எப்படி என்பதை நீங்களும் பாருங்கள்… இந்த வீடியோவைப் பார்க்கும் பலரும் இந்த சைக்கிள் கிரைண்டரை கண்டுபிடித்தவருக்கு பாராட்டு தெரிவித்துவருகிறார்கள்.