ஈபில் டவர் முன்பு அறிமுகம் இல்லாதருடன் முத்தமிட்டு புகைப்படம் எடுத்துக்கொண்ட வினோத பெண்
டுவிட்டரில் கிறிஸ்டியான குயி என்ற பெயரில் உள்ள இந்தப் பெண் ஈபிள் டவர் முன்பும் ரோம் நினைவுச் சின்னம் முன்பும் முகம் முன்பின் அறிமுகமில்லாத ஆண்களுடன் முத்தமிட்டு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
உலக அதியசயங்கள் என்று அழைக்கப்படுகிற தாஜ்மஹால், ஈபில் டவர், சீன பெருஞ்சுவர், எகிப்தின் பிரமீடுகள் போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டும் அங்கே புகைப்படம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கலாம். அப்படி செல்லும்போது, வித்தியாசமான கோணங்களில் புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள். ஆனால், ஒரு பெண் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள ஈபில் டவர் முன்பு முன்பின் தெரியாத அறிமுகம் இல்லாத நபருன் முத்தமிட்டு எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரல் ஆகியுள்ளது. இது போல, உலக நினைவு சின்னங்கள் முன்பு ஒருவரை முத்தமிட்டு புகைப்படம் எடுத்துக்கொள்வதை ஒரு வினோத பொழுதுபோக்காக கொண்டுள்ளார் இந்த வினோத பெண்.
டுவிட்டரில் கிறிஸ்டியான குயி என்ற பெயரில் உள்ள இந்தப் பெண் ஈபிள் டவர் முன்பும் ரோம் நினைவுச் சின்னம் முன்பும் முன்பின் அறிமுகமில்லாத நபருடன் முத்தமிட்டு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இப்படி புகைப்படம் எடுப்பதை அவர் வழக்கமாகக் கொண்டுள்ளார்.
கடலூர் ஆற்றுக்குள் குப்பைக் கொட்டிய 2 அதிகாரிகள்…மக்கள் அதிர்ச்சி! நீர்நிலைகளை மாசுபடுத்துவதால் வரும் தீமைகளை பற்றி அறிய இந்த வீடியோவைப் பாருங்கள்.
கொசாவாவைச் சேர்ந்த கிறிஸ்டியானா குயி, தனது டுவிட்டர் பக்கத்தில் தான் பயணம் செய்த இடங்களில் உள்ள உலக நினைவுச் சின்னங்கள் முன்பு அறிமுகம் இல்லாத ஆண்களுடன் முத்தமிட்டபடி எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு டுவிட்டரில் பலரும் அவரை வியந்து வாழ்த்துகளைத் தெரிவித்து கம்மெண்ட் செய்துள்ளனர்.
I hope this guy i met at the Eiffel Tower and asked for a pic of us kissing so i could pretend i had a romantic time in Paris is doing good. pic.twitter.com/KD4mxMI9NX
கிறிஸ்டியானா குயி எப்படி ஈபிள் டவர் முன்பு ஒருவரை முத்தமிட்டபடி புகைப்படம் எடுத்துக்கொண்டார் என்பது பற்றி ஊடகங்களிடம் கூறியுள்ளார். கிறிஸ்டியானா புகழ்பெற்ற ஈபிள் டவர் இடத்துக்கு சென்றபோது, ஒரு முன்பின் அறிமுகமில்லாத நபரை அணுகியுள்ளார். உங்களுக்கு பெண் தோழி இருக்கிறாரா என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர் இல்லை என்று பதில் அளித்துள்ளார். இதையடுத்து கிறிஸ்டியானா, அப்படியானால் எனக்கு ஒரு சிறிய உதவி செய்ய முடியுமா என்று கேட்டிருக்கிறார்.
கிறிஸ்டியான “நான் அவரைப் பார்த்து ஈபிள் டவர் முன்பு ஒரு புகைப்படம் எடுப்பதற்காக என்னை முத்தமிட முடியுமா” என்று கேட்டுள்ளார்.
அந்த நபரும் தாராளமாக என்று கிறிஸ்டியானாவை முத்தமிட்டபடி புகைப்படத்துக்கு போஸ் கொடுத்துள்ளார்.
அதே போல, ரோமில் உள்ள நினைவுச் சின்னத்தின் முன்பும் ஒருவருடன் முத்தமிட்டபடி புகைப்படம் எடுத்துள்ளார். அமெரிக்காவின் கெண்டகியில் ஒரு தீயணைப்பு வீரரை முத்தமிட்டபடி புகைப்படம் எடுத்துள்ளார்.
இந்த புகைப்படங்களுக்கு 5 லட்சத்திற்கு மேற்பட்டோர் லைக் செய்தும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ரிடுவிட் செய்தும் உள்ளனர். ஆயிரக்கணக்கானோர் கம்மெண்ட் செய்துள்ளனர்.
அதில் ஒரு டுவிட்டர் பயணர் “எப்படி இவ்வளவு தைரியமா இருக்கிறீர்கள்?” என்று கேட்டுள்ளார். எப்படியோ, கிறிஸ்டியானாவின் இந்த புகைப்படங்கள் டுவிட்டரில் வைரல் ஆகியுள்ளது