Africa Cup of Nations game : ஆண்களுக்கு நிகராக வாய்ப்புகள் பெண்களுக்கு அளிக்கப்படும் பட்சத்தில் ஆண்களுக்கு நிகராக சாதனைகளையும் பெண்கள் புரிவார்கள். பெண்களுக்கு அதிகாரம் அளித்தால் அவர்கள் தங்களுக்கான தளத்தில் சாதனைகளை தொடர்ந்து புரிவார்கள் என்பதற்கு முகான்சாங்கா மேலும் ஒரு எடுத்துக் காட்டாய் திகழ்கிறார்.
ஆப்பிரிக்காவில் ஆப்பிரிக்க கோப்பைக்கான கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்ற போட்டியில் சலீமா, முதல் பெண் ரெஃப்ரியாக களம் இறங்கி சிறப்பான பங்கை அந்த போட்டியில் ஆற்றியுள்ளார். கேமரூனில் நடைபெற்ற இந்த போட்டியில் ரெஃப்ரியாக களம் இறங்கிய சலீமா ஜிம்பாப்வே மற்றும் கயானா நாடுகளுக்கு இடையேயான கால்பந்து போட்டியை நடத்தினார். இந்த போட்டியில் ஜிம்பாப்வே 2க்கு 1 என்ற கோல் கணக்கில் கயானாவை வீழ்த்தியது.
சலீமாவின் இத்தகைய சாதனையை பலரும் பாராட்டி வருகிறனர். ஆண்களுக்கான போட்டிகள் மற்றும் பொறுப்புகளாகவே பார்க்கப்பட்டு வந்த இடத்தில் தற்போது பெண்களும் தங்களின் சிறப்பான பங்களிப்பை தந்து வருகின்றனர் என்று ஜிம்பாப்வே அணி ஆதரவாளர் ஃபெலிசியா சிஸ்போ கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil