இதேபோன்ற மற்றொரு சம்பவத்தில் இரண்டு சிறுமிகள் பெரிய பூந்தொட்டியை திருடியதாக ஒரு எக்ஸ் பயனர் கூறினார்.
திருட்டு என்பது சகஜமாக நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால், பூந்தொட்டிகளை திருடுவார்களா என்றால் ஒரு பெண் தனது ஸ்கூட்டரில் வேகமாக செல்வதற்கு முன்பு ஒரு வீட்டின் வெளியில் இருந்து பூந்தொட்டிச் செடியை எடுத்துச் செல்வ்து சிசிடிவி வீடியோவில்பதிவாகியுள்ளது. எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட வீடியோவில், ஒரு சில பாதசாரிகள் நடந்து செல்லும் அமைதியான தெருவைக் காட்டுகிறது.
அந்த பெண், ஒரு ஸ்கூட்டரில், ஏதோ கவனித்தது போல் ஒரு வீட்டின் முன் திடீரென நின்று கொண்டிருந்தார். தயக்கமின்றி, வாகனத்தை நிறுத்திவிட்டு, செடியின் தண்டுகளைச் சுற்றியுள்ள பசுமையைப் பிரித்து, பானையை தன் ஸ்கூட்டரில் வைக்கிறார். ஒரு கார் அவளைக் கடந்து சென்றாலும், அவர் அச்சப்படாமல், தன் ஸ்கூட்டரைத் திருப்பிக் கொண்டு சென்றுவிடுகிறார்.
இந்த வீடியோவைப் பாருங்கள்:
“ஸ்கூட்டரில் ஒரு பெண்மணி பட்டப்பகலில் பூந்தொட்டிகளைத் திருடி மாட்டிக்கொண்டார்” என்ற தலைப்புடன் ‘கர் கே காலேஷ்’ என்ற எக்ஸ் பக்கத்தில் இந்த வீடியோ வெளியானது.
இந்த வீடியோ ஒரு லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளுடன் வைரலாகி வருகிறது. பல பயனர்கள் வீடியோ குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.
ஒரு பயனர் கருத்துத் தெரிவிக்கையில், “பெண்கள் பூந்தொட்டிகளைத் திருடுவது என்ன? இரண்டு நாட்களுக்கு முன்பு, 2 சிறுமிகள் ஒரு பெரிய கம்லாவைத் திருடி பிடிபட்டனர், ஆனால், அதன் எடை காரணமாக தோல்வியடைந்தனர். ஆனால், உண்மையில், இந்த பூந்தொட்டிகளை அவர்கள் என்ன செய்வார்கள்?” என்று கேட்டுள்ளார்.
மற்றொரு பயனர் எழுதினார், "பூந்தொட்டிகள் மீதான விருப்பம் எனக்கு புரியவில்லை." மூன்றாவது பயனர், "ஏ துளசி" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒரு மாதத்திற்கு முன்பு, இதே போன்ற ஒரு வீடியோ வைரலானது. உத்தரபிரதேச மாநிலம், நொய்டாவில் ஒரு நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வெளியில் இருந்து ஒரு பூந்தொட்டி செடியை பி.எம்.டபிள்.யூ காரை ஓட்டிச் செல்லும் பெண்மணி எடுத்துச் சென்றார். இந்த காட்சி சமூக ஊடகங்களில் ஆயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்றது, பல பார்வையாளர்களை குழப்பமடையச் செய்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“