Advertisment

வேகமாக வந்த சரக்கு ரயில்; அவசரமாக கடக்கும்போது தண்டவாளத்தில் விழுந்த பெண்: வைரல் வீடியோ

உத்தரபிரதேசத்தின் மதுராவில் ஒரு பெண் தண்டவாளத்தில் படுத்துக் கிடக்க, ஒரு ரயில் கடந்து செல்கிற ஒரு கணம் இதயத்தை நிறுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
woman suvives under train

ஒரு பெண் அவசரமாக கடக்கும்போது, ரயில் ரயில் தண்டவாளத்தில் விழுந்து அசையாமல் கிடந்தபோது, ரயில் வேகமாக கடந்து செல்கையில் அந்த பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வீடியோ

உத்தரபிரதேசத்தின் மதுராவில் ஒரு பெண் தண்டவாளத்தில் படுத்துக் கிடக்க, ஒரு ரயில் கடந்து செல்கிற ஒரு கணம் இதயத்தை நிறுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Woman survives close call with speeding train in Mathura; the Internet calls it a ‘miracle’

ராணுவ சரக்கு ரயில் வேகமாக வரும்போது, ஒரு பெண் அவசரமாக கடக்கும்போது, ரயில் ரயில் தண்டவாளத்தில் விழுந்து அசையாமல் கிடந்தபோது, ரயில் வேகமாக கடந்து செல்கையில் அந்த பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில், ஒரு ராணுவ சரக்கு ரயில் வேகமாக செல்கிறது. அங்கே இரண்டு தண்டவாளத்திற்கு இடையே ஒரு பெண் அசையாமல் படுத்துக் கிடக்கிறார். அங்கே இருந்த பயணிகள், “லெட்டி ரே! (படுத்துக்கோ, படுத்துக்கொ)” என்று வெறித்தனமாக கத்துகிறார்கள். ரயில் வேகமாகச் செல்கிறது, மேலும், பதற்றம் குறைகிறது, ரயில் நிற்கும் போது, ​​அந்தப் பெண் காயமின்றி வெளியே வருகிறார். இந்த சம்பவத்தின் வீடியோ பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்துகிறது. நிம்மதி அழுகைகளும் "மாதா ராணி கி ஜெய்" என்ற கோஷங்கள் எழுகின்றன், பார்வையாளர்கள் அந்த பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தற்கு நன்றி தெரிவிக்கின்றனர்.

Advertisment
Advertisement

இந்த சம்பவத்தை பதிவு செய்த ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. “உத்தரப் பிரதேசம், மதுராவில், ஒரு பெண் அவசரத்தில், ரயில் பாதையில் விழுந்தார். அப்போது ஒரு ராணுவ சிறப்பு சரக்கு ரயில் வந்தது. அந்தப் பெண் தண்டவாளத்தின் நடுவில் படுத்துக் கொண்டார். ரயில் அந்த பெண்ணைக் கடந்து சென்றது. அந்தப் பெண் முற்றிலும் பாதுகாப்பாக இருக்கிறார்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வைரல் வீடியோவைப் பாருங்கள்:


இந்த வீடியோ 70,000-க்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது, ஏராளமானோர் கருத்துகள் பிரிவில் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.


ஒரு பயனர், “இது ஒரு அதிசயம்” என்று எழுதினார். மற்றொரு பயனர், “அது பயங்கரமானது, கடவுளுக்கு நன்றி, அந்த பெண் நலமாக இருக்கிறார்” என்று எழுதினார். 

மூன்றாவது பயனர், “உயிர் போய் உயிர் வந்தது” eன்று எழுதினார். நான்காவது நபர் எழுதினார்,   “அவர் ஒரு பெண், அவர் எங்கும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்.” என்று எழுதினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Viral Video
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment