கோவையில் கார் கவரை திருடி சென்ற பெண்: சி.சி.டி.வி வீடியோ வைரல்

கோவையில் காருக்கு போடப்பட்டு இருந்த கவரை பெண் திருடிச் சென்ற சி.சி.டி.வி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவையில் காருக்கு போடப்பட்டு இருந்த கவரை பெண் திருடிச் சென்ற சி.சி.டி.வி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
car cover theft

கோவையில் காருக்கு போடப்பட்டு இருந்த கவரை பெண் திருடிச் சென்ற சி.சி.டி.வி வீடியோ

கோவையில் காருக்கு போடப்பட்டு இருந்த கவரை பெண் திருடிச் சென்ற சி.சி.டி.வி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

கோவை, மாநகரில் கடந்த சில மாதங்களாக அதிக அளவில் இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டு வந்த நிலையில், நான்கு சக்கர வாகனங்களும் திருடப்பட்டு வருவதாக புகார்களும் எழுந்து வருகிறது. இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வெயில், மழைக் காலங்களில் மற்றும் தூசி அடையாமல் இருப்பதற்கு கவர்களை மாட்டி பாதுகாப்பாக நிறுத்துவது வழக்கம். 

அதுபோன்று கோவை, ராமநாதபுரம் பகுதியில் நேற்று இரவு ஒரு வீட்டிற்கு முன்பு நிறுத்தப்பட்டு இருந்த காரின் மீது கவர் போடப்பட்டு இருந்தது. 

நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் அங்கு வந்த ஒரு பெண் காரில் போடப்பட்டு இருந்த கவரின் அதில் கட்டப்பட்டு இருந்த கயிறுகளை நான்கு புறமும் சென்று கழற்றி அந்தக் கவரை சுற்றி தனது கையில் எடுத்து  செல்லும் காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அந்தக் காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Viral News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: