New Update
/tamil-ie/media/media_files/uploads/2018/07/Mother-beats-daughter-with-slipper.jpg)
Mother beats daughter with slipper
Mother beats daughter with slipper
இளம் வயது சகோதரிகள் இருவரும் ஆபாச நடனம் ஆடிக்கொண்டிருந்தபோது தாயிடம் மாட்டிக்கொண்டு செருப்படி வாங்கிய வீடியோ தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ஸ்பெயின் நாட்டில், இளம் பருவத்தில் இருக்கும் சகோதரிகள் இருவரும் தங்களின் அறைக்குள்ளே பாடல் ஒன்றைப்போட்டு நடனம் ஆடிக்கொண்டிருந்தனர். மேலும் இந்த நடனத்தை வீடியோவாக ரெகார்ட் செய்துகொண்டும் இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அறைக்குள்ளே நுழைந்த பெண்களின் தாய் இவர்கள் நடனத்தைப் பார்த்தார்.
இரண்டு பெண்களும் ஆபாசமாக ஆடுவதைப் பார்த்த அடுத்த நொடியே கடும் கோபத்தில் சிவந்துப்போனார். ஒரு வினாடி கூட யோசிக்காமல் காலில் இருந்த செருப்பை ஆவேசமாக கிழற்றி இரண்டு மகள்களையும் விளாசித் தள்ளினார்.
தாய் கொடுத்த அடியில் கதறிக் கொண்டே அறையை விட்டு ஓட இருவரும் முயற்சி செய்யும் வீடியோ சமூக வலைத்தளம் முழுவதும் வைரலாகி வருகிறது. இதில் முக்கிய திருப்பமாக, இந்த நிகழ்வு பெரும் நகைச்சுவையாக இருப்பதாகக் கூறி அப்பெண்களே இதனைச் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.