ஆண் குழந்தை பிறக்க காரணம் என் தோட்டத்து மாம்பழம் தான் : இந்துத்துவா தலைவர்!

தலித்துக்கள் நடத்திய விழா ஒன்றில் வன்முறை கலவரத்தை தூண்டியதற்காக கைது செய்யப்பட்டார்.

தனது தோட்டத்தில் விளைந்த மாம்பழங்களை சாப்பிடுவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்று காராஷ்ட்டிர மாநிலத்தைச் சேர்ந்த இந்துத்துவா தலைவர் சாம்பாஜி பிடே கூறி இருப்பது சமூகவலைத்தளங்களில் விமர்சனத்தை எழுப்பியுள்ளது.

இந்துத்துவா தலைவர்கள் பொதுமேடையில் சர்ச்சைக்குரிய விதங்களில் பேசி விமர்சனங்களை சந்திப்பதை தொடர் கதையாக வைத்துள்ளனர். அதிலும் சில இந்துத்துவா தலைவர்கள் கூறும் கருத்துக்கள் சிலருக்கு பகீர் சிரிப்பையும் உண்டாக்கி விடுகின்றன. அந்த வரிசையில் தான் தற்போது இந்துத்துவா தலைவர் சாம்பாஜி பிடேயின் பேச்சும் சேர்ந்துள்ளது.

மகாராஷ்ட்டிரத்தின் பீமா கோரேகானைச் சேர்ந்தவர் சாம்பாஜி பிடே. இந்துத்துவா தலைவர்களில் ஒருவர். சமீபத்தில் தான் அந்த பகுதியில் தலித்துக்கள் நடத்திய விழா ஒன்றில் வன்முறை கலவரத்தை தூண்டியதற்காக கைது செய்யப்பட்டார். பின்பு ஜாமீனிலும் வெளிவந்தார்.’

இந்நிலையில் சாம்பாஜி பிடே சமீபத்தில் நடைப்பெற்ற பொதுநிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது “மாம்பழங்கள் பற்றி ராமாயணம், மகாபாரத்திலும் சொல்லப்பட்டு இருக்கின்றன. என்னுடைய தோட்டத்தில் விளைந்த மாம்பழங்களை சாப்பிட்டதால் பல தம்பதியனருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. மாம்பழத்தில் சுவை மட்டுமில்லை சக்தியும் இருக்கிறது” என்று பேசியுள்ளார்.

சாம்பாஜி பிடேயின் இந்த பேச்சு பலரையும் சிரிக்க வைத்துள்ளது. அத்துடன் நெட்டிசன்களும் சாம்பாஜி பிடேyஇன் கருத்தை சமூகவலைத்தளங்களில் போட்டு கலாய்த்து தள்ளி வருகின்றன.

×Close
×Close