/tamil-ie/media/media_files/uploads/2018/11/higher-education-8.jpg)
மகளிர் டி-20 உலகக்கோப்பை தொடரில் ‘ஹாட்ரிக்’ வெற்றியுடன் அரையிறுதிக்கு முன்னேறியுள்ள இந்திய அணிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
டி20 உலகக்கோப்பை:
கடந்த சில ஆண்டுகளாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணியால் இந்தியாவிற்கு பெருமைகள், பாராட்டுக்கள் வந்து குவிக்கின்றன என்றால் அதில் மாற்றுக்கருத்து இல்லை. தோனி, விராட் கோலி ஆட்டத்தை கைத்தட்டி ரசித்துப் பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள் இன்று பெண்கள் கிரிக்கெட்டையும் ரசிக்க தொடங்கி விட்டார்கள்.
மிதாலி ராஜ், ஹர்மன்பிரீத் கவுர் போன்ற வீராங்கனைகளுக்கு ஆண் கிரிக்கெட் ரசிகர்கள் தான் அதிகம். அந்த அளவிற்கு களத்தில் அவர்களின் ஆட்டம் புயல் போல் உள்ளது. இந்நிலையில்,பெண்களுக்கான 6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது.
இதில், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறி புதிய சாதனைகளை படைத்து வருகிறது.
நேற்றைய (16.11.18) ஆட்டத்தில், இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி மற்றும் ஹிட்மேன் ரோகித்தை விட டி20 போட்டிகளில் அதிக ரன்களை குவித்து முதலிடம் பிடித்து புதிய சாதனையை படைத்தார். மிதாலியின் இந்த சாதனைக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்தன.
புரோவிடென்சியில் இன்று (17.11.18) நடைபெறும் ‘பி’ பிரிவு லீக் ஆட்டத்தில் இந்திய அணி, 3 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் மேலூங்கியுள்ளது.
இந்நிலையில், ஹாட்ரிக் வெற்றி படைத்து உலகக்கோப்பைக்கு நெருங்கியுள்ள இந்திய மகளிர் அணிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி உட்பட பலரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
கிரிக்கெட் வீரர்களின் வாழ்த்து மழை:
1. கேப்டன் விரார் கோலி:
We’re on our way to the semi-finals.. and it’s time to back Team India to bring home the World Cup! #JerseyKnowsNoGender????
I nominate @RishabPant777, @NSaina, @chetrisunil11 and all of you to join in. Wear your jerseys and strike the pose to cheer them on! ????@Uber_India#WT20pic.twitter.com/cVFhOYjXfX
— Virat Kohli (@imVkohli) 15 November 2018
“உலகக்கோப்பையை இந்தியாவுக்கு கொண்டு வரும் நேரம் வந்துவிட்டது” என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
2. சானியா மிர்சா:
பெண்கள் அணியை சியரப் பண்ண நான் தயாரகி விட்டேன்.
#JerseyKnowsNoGender???? I'm going to be cheering Team India on! @MangteC, @itsSSR, @hardikpandya7 and each one of you – it’s time to wear your jerseys or our blue tonight, strike the pose and show your support. Great initiative by @Imvkohli and @Uber_India@ICC#WT20@ImVkohlipic.twitter.com/W3GpWQnG5D
— Sania Mirza (@MirzaSania) 15 November 2018
3.கே. எல் ராகுல்
உங்களின் ஆட்டத்தை பார்த்தல், உலகக்கோப்பை இந்தியாவிற்கு வரும் நேரம் நெருங்கி விட்டது என்று நினைக்கிறேன். இறுதிப்போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள்.
With the way the girls are playing, I think the Cup is coming home! #JerseyKnowsNoGender ???? So let's cheer them onto the finals. Wear your jersey(or wear blue)do the pose & share your pic. @ashwinravi99@aditigolf@DanishSait - keep it going! @imVkohli@Uber_India@ICC#WT20pic.twitter.com/AW1sz4oZh3
— K L Rahul (@klrahul11) 16 November 2018
4. சாய்னா நெவால்
உங்கள் அணியை சியரப் பண்ண நான் தயாராகி விட்டேன். வாழ்த்துக்கள்
#JerseyKnowsNoGender???? I'm going to be cheering Team India on! @MirzaSania@klrahul11@HimaDas8 and each one of you – it’s time to wear your jerseys or our blue tonight, strike the pose and show your support. Great initiative by @Imvkohli and @Uber_India@ICC#WT20pic.twitter.com/zG0aFT5M01
— Saina Nehwal (@NSaina) 15 November 2018
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.