உலக வனவிலங்குகள் நாளில் காட்டில் புலிகள் வரிசையாக அணிவகுத்துச் செல்லும் வீடியோ சமூக ஊடகங்களில் நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது.
இந்த பூமியை மனிதன் ஆளலாம். இந்த பூமி மனிதனுக்கு மட்டுமல்ல எல்லா உயிரினங்களுக்கும் சொந்தமானது. நீரின்றி அமையது உலகென்றால், வனம் இன்றி நீண்ட காலம் பூமி உயிர்க்கோளமாக இருக்க முடியாது. ம்னிதர்கள் வனங்களை நாம் தான் பாதுகாக்கிறோம் என்று பெருமையாக சொல்லிக் கொள்ளலாம் உண்மையில் வனங்களைக் காப்பது வனவிலங்குகள்தான். வனவிலங்குகள் அழிந்தால், வனமும் அழியும். அதனால்தான், வனவிலங்குகளைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றனர்.
வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்காக உலக வனவிலங்குகள் நாள் மார்ச் 3-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு உலக வனவிலங்குகள் நாள் 50வது ஆண்டாகக் கொண்டாடப்படுகிறது.
வனங்களின் பரப்பும் வளமும் அந்த வனத்தில் இருக்கும் புலிகளின் எண்ணிக்கையை வைத்துதான் அளவிடப்படுகிறது. வனங்களைக் காப்பவை புலிகளாகத்தான் இருக்கின்றன. அதனால், புலிகளை காப்போம். வனங்களைக் காப்போம் என்ற முழக்கமும் முன்வைக்கப்படுகிறது.
உலக வனவிலங்குகள் நாளில் ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்தா நந்தா, காட்டில் புலிகள் வரிசையாக அணிவகுத்து செல்லும் வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில், 4 புலிகள் வரிசையாக அணி வகுத்து செல்கின்றனர். புலிகளின் கம்பீரமும் அதன் நடையும் ஈர்க்கும் விதமாக உள்ளது.
காட்டில் புலிகள் வரிசையாக அணி வகுத்துச் செல்லும் வீடியோவை நெட்டிசன்கள் ஆர்வமாகப் பார்த்து பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“