New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/01/a418.jpg)
கடந்த வெள்ளியன்று Boo இறந்துவிட்டதாக அதன் உரிமையாளர் பேஸ்புக் பக்கத்தில் அறிவித்துள்ளார்
உலகின் அழகான நாய் என்று பெயரெடுத்த பொமரேனியன் வகையைச் சேர்ந்த பூ(Boo) எனும் நாய் கடந்த வெள்ளியன்று மரணம் அடைந்துவிட்டதாக அதன் உரிமையாளர் சமூக தளத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த 2010ம் ஆண்டு அக்டோபர் மாதம் பாடகி கேஷா, 'எனக்கு ஒரு ஆண் நண்பன் கிடைத்துவிட்டான்' என்று சமூக தளங்களில் பகிர்ந்த பிறகு, அமெரிக்காவைச் சேர்ந்த Boo எனும் நாய் பெரும் வைரலானது. இப்போது உள்ள அளவிற்கு சோஷியல் மீடியாக்களின் ஆதிக்கம் இல்லாத அந்த நேரத்திலேயே, Boo செம ஹிட்டானது.
முடியை கிராப் செய்து வெட்டிய அதன் அழகிற்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது. அதற்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்த அதன் உரிமையாளர் தனியாக ஃபேஸ்புக்கில் அந்த நாய்க்கு என தனி பக்கமே ஆரம்பிக்க, 17 மில்லியன் ஃபாலோயர்களை சம்பாதித்தது Boo. உலகின் அழகான நாய் என்ற பெயரையும் Boo பெற்றது.
இந்த நிலையில், கடந்த 2017ம் ஆண்டு Booவின் நெருங்கிய நண்பனும், அதே வீட்டில் வளர்ந்த மற்றொரு நாய் ஒன்று இறந்ததில் இருந்து இதய பிரச்சனை காரணமாக Boo தவித்து வந்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, கடந்த சில நாட்களாகவே மேலும் முடியாமல் போக, கடந்த வெள்ளியன்று Boo இறந்துவிட்டதாக அதன் உரிமையாளர் பேஸ்புக் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
இதனால், அதன் ரசிகர்கள் அனைவரும் Booவின் ஆத்மா சாந்தி அடைய பிராரத்தனை செய்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.