ஒரு துண்டு சீஸ் ரூ.36 லட்சத்திற்கு ஏலம்: கின்னஸ் சாதனை படைத்த 'காப்ரலெஸ்' சீஸ்!

ஸ்பெயினில் நடைபெற்ற ஏலத்தில், ஒரு துண்டு சீஸ் ரூ.36 லட்சத்திற்கு விற்கப்பட்டு கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. 'காப்ரலெஸ்' (Cabrales) வகையை சேர்ந்த இந்த சீஸ், ஏலத்தில் அதிக விலைக்கு விற்கப்பட்ட ஒரு துண்டு சீஸ் என்ற பெருமையை தன்வசப்படுத்தியுள்ளது.

ஸ்பெயினில் நடைபெற்ற ஏலத்தில், ஒரு துண்டு சீஸ் ரூ.36 லட்சத்திற்கு விற்கப்பட்டு கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. 'காப்ரலெஸ்' (Cabrales) வகையை சேர்ந்த இந்த சீஸ், ஏலத்தில் அதிக விலைக்கு விற்கப்பட்ட ஒரு துண்டு சீஸ் என்ற பெருமையை தன்வசப்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
cheese-auction

ஒரு துண்டு சீஸ் ரூ.36 லட்சத்திற்கு ஏலம்: கின்னஸ் சாதனை படைத்த காப்ரலெஸ்'சீஸ்!

ஒரு கிலோ சீஸின் விலை ரூ.36 லட்சம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், இது உண்மை! வடமேற்கு ஸ்பெயினில் நடைபெற்ற ஏலத்தில், ஒரு துண்டு சீஸ் சாதனை விலைக்கு விற்கப்பட்டு கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. 'காப்ரலெஸ்' (Cabrales) வகையைச் சேர்ந்த இந்த சீஸ், ஏலத்தில் அதிக விலைக்கு விற்கப்பட்ட ஒரு துண்டு சீஸ் என்ற பெருமையை தன்வசப்படுத்தியுள்ளது. சீஸ் பிரியர்கள் ஒவ்வொருவருக்கும் இந்த 'காப்ரலெஸ்' சீஸை ஒருமுறையாவது ருசித்துப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் நிச்சயம் தோன்றும்.

Advertisment

வடமேற்கு ஸ்பெயினின் அஸ்டூரியாஸ் மாகாணத்தில், உலகின் மிக உயர்தர சீஸுக்கான விறுவிறுப்பான ஏலம் நடைபெற்றது. ஏஞ்சல் டயஸ் ஹெர்ரேரோ தொழிற்சாலைதான் உலகிலேயே மிக விலை உயர்ந்த இந்த சீஸைத் தயாரித்து ஏலத்தில் பங்கேற்க வைத்தது. இந்த காப்ரலெஸ் சீஸ் ஏற்கனவே 2019-ல் நடந்த ஏலத்தில் 20,500 யூரோக்களுக்கு விற்கப்பட்டு சாதனை படைத்திருந்தது. அதேபோல், 2018-ல் 2,474 யூரோக்களுக்கு விற்கப்பட்டது. இதன்மூலம், உலகின் மிக விலை உயர்ந்த சீஸ் என்ற சாதனையை 'காப்ரலெஸ்' தனது பெயரில் நிலைநிறுத்தியிருப்பது இது 3வது முறையாகும்.

காப்ரலெஸ் சீஸ் இவ்வளவு விலை உயர்ந்தது ஏன்?

இந்த காப்ரலெஸ் சீஸின் விலை உயர்ந்ததற்குக் காரணமான தனித்துவமான அம்சங்கள் உள்ளன. கடல் மட்டத்திலிருந்து 1,500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள 'லாஸ் மாஸோஸ்' (Los Mazos) என்ற குகையில் சுமார் 10 மாதங்கள் எடுத்து இந்த சீஸ் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பழுப்பு நிற சீஸ், பசுவின் பாலிலிருந்து தயாரிக்கப்பட்டது. போட்டியில் பங்கேற்ற மற்ற 14 உள்ளூர் சீஸ் வகைகளைத் தாண்டி, ஏலத்திற்குத் தகுதி பெற்றது. சில நேரங்களில் ஆட்டுப்பாலிலிருந்தும் இந்த சீஸ் தயாரிக்கப்படுகிறது. சீஸ் தயாரிப்பிற்கு உகந்த குளிர்ந்த, சரியான ஈரப்பதம் கொண்ட குகையில் வைத்து தயாரிக்கப்படுவதால் இந்த சீஸ் ஒரு தனித்துவமான சுவையைப் பெறுகிறது. ஸ்பானிஷ் காப்ரலெஸ் நீல சீஸ் தயாரிப்பு அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

Advertisment
Advertisements

இந்த சீஸுக்கான ஏலம் 3,000 யூரோக்களில் (சுமார் ரூ.2.7 லட்சம்) தொடங்கியது. அதைத் தொடர்ந்து, மின்னல் வேகத்தில் 40 சலுகைகள் வந்தன. இறுதியாக, இவான் சுவாரஸ் (Iván Suárez) என்ற உணவக உரிமையாளர், உலகின் மிக விலை உயர்ந்த சீஸை ஏலத்தில் எடுத்துக்கொண்டார். கடந்த 5 ஆண்டுகளாக இவர்தான் அதிக தொகைக்கு இந்த சீஸை ஏலத்தில் வென்று வருகிறார்.

காப்ரலெஸ் போட்டி 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டி, வடமேற்கு ஸ்பெயினின் தலைமுறை தலைமுறையாக தொடரும் சீஸ் தயாரிப்புப் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்கிறது. இந்த கின்னஸ் சாதனை, வெறும் உணவுப் பொருளுக்கானது அல்ல, மாறாக நீண்ட பாரம்பரியத்தின் மதிப்புக்குக் கிடைத்த அங்கீகாரம்.

Viral

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: