இணையத்தில் வைரலாகும் உலகின் உயரமான ஆணும், குள்ளமான பெண்ணும் எடுத்துக் கொண்ட செல்ஃபிஸ்!

உலகின் உயரமான ஆணும், குள்ளமான பெண்ணும் எகிப்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரை சேர்ந்தவர் ஜோதி ஆம்ஜ். 25 வயதாகும் ஜோதியின் உயரம் 2 அடி 6 அங்குலம். 2 வயது குழந்தையை விட குள்ளமாக தெரியும் ஜோதி, இந்தியாவில் மிகவும் பிரபலமானவர். பல்வேறு டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் தோன்றியுள்ளார். அதே போல், துருக்கியைச் சேர்ந்த சுல்தான் கோஷன் உலகிலேயே உயரமான மனிதர் என்ற பெருமைக்குரியவர். 36 வயதாகும், சுல்தானின் உயரம் 8 அடி, 9 அங்குலம். இவர்கள் இருவரும் 2011 ஆம் ஆண்டின் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளனர்.

சமீபத்தில், எகிப்தின் சுற்றுலா துறை நிர்வாகம், இவர்கள் இருவரையும், எகிப்தின் சுற்றுலா துறை விளம்பரத்திற்காக அழைத்திருந்தார். இங்கு சென்ற இவர்கள், எகிப்தின் நைல் நதிக்கரையில் பல்வேறு புகைப்படங்களை எடுத்துள்ளனர். அத்துடன், உயரம் – குள்ளம் இரண்டையும் வேறுபடுத்திக் காட்டும் வகையில், இவர்கள் இருவரும் எடுத்துக் கொண்ட செல்ஃபிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இவர்கள், இருவரும் எகிப்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை, சமூகவலைத்தளங்களில் பார்த்த ரசிகர்கள் அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர். சுல்தான் இதேப்போன்று, உலகின் குள்ளமான ஆணான சந்தர பகதூர் டங்கி என்பவரை, லண்டனில் சந்தித்து, அவருடனும் பல்வேறு புகைப்படங்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Viral News by following us on Twitter and Facebook

×Close
×Close