கர்நாடகாவில், உடுப்பியில் உள்ள சாலையின் நிலையைமை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வரும் விதமாக, எமராஜா தங்கச் சரிகை உடையில் சித்திரகுப்தன் உடன் சேர்ந்து, பேய் வேடமிட்டவர்களை வைத்து நீளம் தாண்டும் போட்டியை நடத்தி கவனத்தை ஈர்த்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கர்நாடகா மாநிலம் உடுப்பியில் குண்டும் குழியுமான சாலையில், இந்து புராணங்களின்படி உயிர்களை எடுக்கும் மரண தேவன் என்று அழைக்கப்படும் ‘எமராஜா’ கையில் கதாயுதத்தை ஏந்தியபடி நீளம் தாண்டுதல் போட்டி நடத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கர்நாடகாவில் உடுப்பியை புகழ்பெற்ற மால்பே கடற்கரையுடன் இணைக்கும் ஆதி உடுப்பி-மால்பே சாலையில் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சாலை முழுவதும் குண்டும் குழியுமாக மோசமாகக் காணப்படுகிறது.
Yamaraja checking road conditions in aadi Udupi !! @YashpalBJP @KotasBJP @CMofKarnataka pic.twitter.com/Izb9p0mtN1
— letsmakebetterplace🍁 (@poojary2024) August 27, 2024
உடுப்பியை மால்பே கடற்கரையுடன் இணைக்கும் ஆதி உடுப்பி மால்பே சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் குளம் போல தேங்கி காட்சி அளிக்கிறது. குண்டும் குழியும் நிறைந்த இந்த சாலை வழியாக செல்லும் மக்கள் படும் சிரமத்தை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லும் விதமாக, இப்படி எமராஜா மற்றும் சித்திரகுப்தன் வேடம் அணிந்து, உடுப்பி சாலையில் பேய் வேடமிட்டவர்களுக்கு நீளம் தாண்டும் போட்டியை நடத்தி நூதன முறையில் சாலையை சீரமைக்கக் கோரி அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.
இந்த வீடியோவில், சாலையில் உள்ள பள்ளங்களில் குளம் போல மழைநீர் தேங்கி நிற்கிறது. அங்கே நாடகத்தில் வரும் எமராஜா கதாபாத்திரம் போல, ஜொலிஜொலிக்கும் உடையில் கையில் கதாயுதத்துடன் எமராஜா நிற்கிறார். அதே போல, அருகே சித்திரகுப்தன் நிற்கிறார். அப்போது, பேய் வேடமிட்டவர்கள் ஓடிவந்து, சாலையில் மழைநீர் தேங்கிய பெரிய பள்ளத்தைத் தாண்டுகிறார்கள். அவர்கள் தாண்டிச் சென்றது, எமராஜாவும் சித்திரகுப்தனும் எவ்வளவு நீளம் தாண்டினார்கள் என்று அளக்கிறார்கள். இந்த காட்சி, சாலையில் மோசமான நிலைமையை அதிகாரிகளுக்கு எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது.
உடுப்பியில் குண்டும் குழியுமான சாலையில் ‘எமராஜா’ மற்றும் ‘சித்திரகுப்தன்’ வேடமிட்டவர்கள், பேய் வேடமிட்டவர்களுக்கு நீளம் தாண்டும் போட்டி நடத்திய இந்த நூதன போராட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்ப்பவர்கள், நாங்கள் கட்டிய வரி எங்கே போனது என்று அரசு நிர்வாகத்தைக் கேள்வி கேட்கின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.