/indian-express-tamil/media/media_files/2025/10/05/yashasvi-jaiswal-indian-cricketer-2-2025-10-05-17-12-55.jpg)
சமீபத்தில் ராஜ் ஷமானி உடனான ஒரு பாட்காஸ்டில், மும்பையில் தனது கிரிக்கெட் கனவைத் தொடரும்போது, தான் பானிபூரி விற்றது மற்றும் டென்ட்களில் வசித்தது உட்படத் தனது ஆரம்பகாலப் போராட்டங்களைப் பற்றி ஜெய்ஸ்வால் மனம் திறந்து பேசினார்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்தியாவின் நம்பிக்கைக்குரிய இளம் கிரிக்கெட் திறமையாளர்களில் ஒருவர். உத்தரப் பிரதேசத்தில் பிறந்த இவர், 23 வயதில் இந்திய A கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த இளம் வீரர் என்ற பெருமையைப் பெற்றபோது, 2019-ல் புகழ் பெற்றார். அதன் பிறகு இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகத் தனது முத்திரையைப் பதித்தார்.
சமீபத்தில் ராஜ் ஷமானி உடனான ஒரு பாட்காஸ்டில், மும்பையில் தனது கிரிக்கெட் கனவைத் தொடரும்போது, தான் பானிபூரி விற்றது மற்றும் டென்ட்களில் வசித்தது உட்படத் தனது ஆரம்பகாலப் போராட்டங்களைப் பற்றி ஜெய்ஸ்வால் மனம் திறந்து பேசினார்.
தனிப்பட்ட போராட்டங்களைப் பற்றிப் பேசுகையில், வாழ்க்கை போராட்டத்துக்காக தான் பானிபூரி விற்றதாகவும், டென்ட்களில் வாழ்ந்ததாகவும் ஜெய்ஸ்வால் பகிர்ந்து கொண்டார். “நான் சிறிது காலம் என் மாமாவுடன் தங்கியிருந்தேன். ஒருநாள், எனக்கு அந்த டென்ட்டில் தங்குவதற்கான வாய்ப்புக் கிடைத்தது. அங்கு முஸ்லிம் யுனைடெட் என்றொரு கிளப் இருந்தது, நான் சிறந்து விளங்க விரும்பிய ஒரு போட்டியில் நான் கலந்துகொள்ள வேண்டியிருந்தது, நான் அதில் நன்றாகச் செய்தேன். பிறகு அவர்கள் எனக்கு அங்கே தங்க வாய்ப்புக் கொடுத்தார்கள்” என்று அவர் கூறினார். மேலும், “நான் ஒரு கிரிக்கெட் சூழலைச் சுற்றியே இருக்க வேண்டும், என் விளையாட்டின் மீது வேலை செய்ய வேண்டும் என்று மட்டுமே விரும்பினேன்” என்றும் அவர் தெரிவித்தார்.
தனக்கு இடம் அளித்த கிளப்பிற்காகத் தான் பானிபூரி விற்று வேலை செய்த நாட்களைப் பற்றியும் ஜெய்ஸ்வால் மேலும் மனம் திறந்தார். “அங்கிருந்தவர்கள் என் குடும்பமாகிவிட்டார்கள், அவர்களுக்காக ஏதாவது சமைத்தால் நான் அவர்களுக்கு உதவுகிறேன். பயிற்சிக்குப் பிறகு அவர்களுக்கு உதவ அவர்கள் அழைத்தால், கொஞ்சம் பணம் சம்பாதிக்க நான் அவர்களுடன் செல்வேன்” என்று அவர் கூறினார்.
“அதுதான் அப்போது என் வாழ்க்கை. எந்த வேலையும் பெருசு சின்னது கிடையாது என்பதால் பரவாயில்லை. நீங்கள் எதைச் செய்தாலும் அதில் உங்கள் 100 சதவீதத்தைக் கொடுப்பதுதான் முக்கியம்” என்று ஜெய்ஸ்வால் ‘ஃபிகரிங் அவுட் வித் ராஜ் ஷமானி’ நிகழ்ச்சியில் கூறினார்.
இந்த கிரிக்கெட் வீரர் தனது வாழ்க்கையை மாற்றிய தருணங்களையும், தனது ஆக்ரோஷத்தை எப்படிச் சமாளித்தார் என்பதையும் மேலும் பிரதிபலித்தார். கண்ணாடியில் தன்னைப் பார்த்துத் தானே பேசுவதைப் பற்றிக் கூறுகையில், “நான் என்னுடன் 10-15 நிமிடங்கள் பேசுகிறேன், அது எனக்கு மிகவும் உதவுகிறது. நான் நன்றாகச் செயல்படும்போதெல்லாம், என்னைப் பாராட்டிக்கொள்ளவும், மேலும் முன்னேறத் தயாராகவும் ஒரு வாய்ப்பைத் தவறவிடுவதில்லை.”
“எனக்கு ஆக்ரோஷம் இருக்கிறது, ஆனால் அத்தகைய நேரங்களில், என் அணிக்கு எது முக்கியம் என்பதைக் கருத்தில் கொள்கிறேன். என் ஆக்ரோஷத்தில் நான் தொலைந்து போக விரும்பவில்லை” என்று அவர் கூறினார். “ஆக்ரோஷம் எனக்கு மிகவும் முக்கியம், ஆனால் அதைக் காட்டக்கூடாது. நம்பிக்கைக்கும் அதீத நம்பிக்கைக்கும் இடையே ஒரு சிறிய வித்தியாசம் உள்ளது.” என்றார்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது ஆரம்பக்காலங்களில் எவ்வளவு கடினமான வாழ்க்கையைக் கடந்து வந்துள்ளார் என்பதை இந்தப் பதிவு தெளிவாகக் காட்டுகிறது.
அவர் கிரிக்கெட்டின் மீது கொண்ட அசைக்க முடியாத பற்றும், ‘எந்த வேலையும் பெருசு சின்னது கிடையாது’ என்ற அவருடைய எண்ணமும் அவரை இந்த நிலைக்குக் கொண்டு வந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.