Year Ender 2018: இணையத்தை அதிர வைத்த டாப் 10 வீடியோஸ்

அது டாக்காவில் இருக்கும் ரெஸ்டாரன்ட் பெயர்' என்று அற்புதமான விளக்கம் ஒன்றை கொடுத்தார் பாருங்க... ஜட்ஜே ஆடிப் போயிட்டாரு!

By: Published: December 29, 2018, 5:33:05 PM

இதோ வந்தாச்சு புத்தாண்டு.. நியூ இயரை எங்கே, யாருடன் இணைந்து கொண்டாடலாம் என்ற சீரியஸ் டிஸ்கஷன் மண்டைக்குள் ஓடிக் கொண்டிருக்கும். பழையன கழிதல், புதியன புகுதல் என்று சொல்வார்கள். ஆனால், இந்த பழையனவை நம் நினைவுகளில் இருந்து அவ்வளவு சீக்கிரம் அழியாது. அப்படிப்பட்ட, 2018ல் இணையதளத்தையே அதிர வைத்த டாப் 10 வீடியோக்கள் என்னென்ன என்பது குறித்து இங்கே பார்ப்போம்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில், நான்காவது மாடியில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவனைக் காப்பாற்ற வந்த ரியல் ‘ஸ்பைடர் மேன்’ Mamoudou Gassama. இவர் கண்ணிமைக்கும் நேரத்தில் தாவியும், ஏறியும் நான்காவது மாடியை அடைந்து, அச்சிறுவனை காப்பாற்றினார். 22 வயதே ஆன அந்த இளைஞரை ஸ்பைடர் மேன் என்று கொண்டாடித் தீர்த்தது இணைய உலகம்.

திருமண நிகழ்வு ஒன்றில், பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தாவின் பாடலுக்கு அட்டகாசமாய் ஸ்டெப்ஸ் போட்டு அனைவரையும் கவர்ந்தவர் இந்த இந்திய மைக்கேல் ஜாக்ஸன். இவரது டான்ஸ் ஏகபோக ஹிட்டானது. பெண்கள்-லாம் விழுந்து விழுந்து ரசிச்சாங்கனா பார்த்துக்கோங்க.

‘இந்த மாதிரி புத்திசாலிங்கள கடல் கடந்து எங்கயாவது பார்த்தாதான் உண்டு’ என்று விமர்சிக்கப்பட்ட க்யூட் சம்பவம் இது. மிஸ் வேர்ல்ட் வங்கதேசம் 2018 போட்டியில் கலந்து கொண்ட அழகி ஒருவரிடம், “H2O என்றால் என்ன?” என்று கேட்கப்பட்டது. அதற்கு ‘அது டாக்காவில் இருக்கும் ரெஸ்டாரன்ட் பெயர்’ என்று அற்புதமான விளக்கம் ஒன்றை கொடுத்தார் பாருங்க… ஜட்ஜே ஆடிப் போயிட்டாரு! அந்த வீடியோ செம வைரல்

பிரபல பாகிஸ்தான் சேனல் ஒன்றில், செய்தி வாசிப்பாளர்களிடையே ஏற்பட்ட மோதல் வீடியோ உலகம் முழுவதும் வைரலானது. பாவம்-பா அந்த பொண்ணு-னு நம்ம ஆளுங்க-லாம் ஃபீல் பண்ற அளவுக்கு இருந்தது அந்த லைவ் மோதல்.

இந்த வீடியோ பற்றி நான் எதுவுமே சொல்லத் தேவையில்லை. மலர் டீச்சரையே மறக்கடிச்ச பிரியா பிரகாஷ் வாரியரின் எக்ஸ்பிரஷன்ஸ், பெண்களையே பொறாமை கொள்ள வைத்தது. வைரல் வீடியோ-ன்னு சொல்லனுமா என்ன!?

அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா, கிறிஸ்துமசை முன்னிட்டு, சாண்டா கிளாஸ் போல வேடமணிந்து அமெரிக்காவில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்குச் சென்று பரிசுப் பொருட்களை கொடுத்தது அனைவரையும் நெகிழ வைத்தது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது சிறப்பு விமானத்தில் ஏறும் போது, எடுத்த வீடியோ உலக வைரல். ஏம்பா.. பிளைட் ஏறுவதில் என்னப்பா வைரல்-னு தானே கேட்குறீங்க… டாய்லெட் பயன்படுத்திவிட்டு, பேப்பரால் கிளீனாக துடைத்துவிட்டு கிளம்பியவரின் ஷூவில் பேப்பர் ஒட்டிக் கொள்ள, அவரும் அதை கவனிக்கவில்லை, அதிகாரிகளும் கவனிக்கவில்லை. ஆனால், கேமரா கவனிக்காமல் இருக்குமா? க்ளிக்கியது… உலகம் முழுக்க வைரல் ஆனது.

இது பாகிஸ்தானுக்கே தலைகுனிவை ஏற்படுத்திய சம்பவம். பாகிஸ்தானில் முதலீடு செய்வது குறித்து, உயர்மட்ட அளவிலான அதிகாரிகளின் ஆலோசனை குவைத்தில் நடைபெற்றது. அதில், அதிகாரி ஒருவர் தனது விலையுயர்ந்த பர்ஸ்-ஐ மறந்து வைத்துச் செல்ல, பாகிஸ்தானை சேர்ந்த மற்றொரு அதிகாரி ஒருவர், யாரும் இல்லாத நேரமாக பார்த்து, அதை அபேஸ் செய்ய, ‘சிக்கிட்டாண்டா சேகர்’ மொமன்ட் தான்.

வீணை வாசிப்பாளரான வீணா ஸ்ரீவாணி, பிரபல பாடகர் ஷங்கர் மகாதேவனின் பாடல் ஒன்றை அபாரமாக வாசித்த வீடியோ, பலரது காலை பொழுதை வசந்தமாக்கியது. பெருமளவில் அந்த வீடியோ பகிரப்பட்டது.

சே..இப்படியொரு சம்பவம் எங்க ஆபீஸ் மீட்டிங்கின் போது நடக்கக் கூடாதா என பாஸ் மேல் செம காண்டில் இருப்பவர்களை ஏங்க வைத்த வீடியோ இது. சீனாவில் அலுவலகம் ஒன்றில் மீட்டிங் நடந்துக் கொண்டிருந்த போது, கூரையைப் பெயர்த்துக் கொண்டு மலைப்பாம்பு ஒன்று வந்து விழுந்தது பாருங்க.. எல்லோரும் கிரேட் எஸ்கேப்!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Latest News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Year ender 2018 top 10 videos

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X