இந்த புது வருஷத்துல என்ன பண்ணலாம்னு யோசிக்காதீங்க…அது யோசிச்சு வச்சிருக்கும்! வைரல் மீம்ஸ்
ஆண்டு முடிவை நகைச்சுவையாக வழியனுப்பும் வகையிலும் புத்தாண்டை ஜாலியாக வரவேற்கும் விதமாகவும் நெட்டிசன்கள் சிரிப்பை நிறுத்தவே முடியாத அளவுக்கு மீம்ஸ்களைப் போட்டு வைரலாக்கி கலக்கி வருகின்றனர்.
எல்லோரும் ஒவ்வொரு ஆண்டும் தொடங்கும்போது புத்தாண்டு அன்று சில உறுதிமொழிகளை எடுப்போம். சில இலக்குகளை நிர்ணயித்துக்கொள்வோம். அதே போல, ஒவ்வொரு ஆண்டும் முடியும்போது, இவ்வளவு நாள் செய்த வேண்டாத சிலவற்றை விட்டுவிட வேண்டும் என்று நினைப்போம்.
Advertisment
அதே போல, அவரவர் வாழ்க்கையில் இதுவரை நடந்த எல்லாவற்றுக்கும் அவர்களே பொறுப்பேற்பது நேர்மையானது. ஆனால், சிலர் எல்லாத்துக்கும் இந்த வருஷம்தான் காரணம் என்று பழியை வருடத்தின் மீது போட்டு விடுவார்கள். இதையெல்லாம், வைத்துதான் 2022-ம் ஆண்டு முடியும் நேரத்தில், நெட்டிசன்கள் சமூக ஊடகங்களில் Year ending மற்றும் புத்தாண்டு மீம்ஸ்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.
சிலர் இந்த புது வருஷத்துல என்ன பண்ணலாம்னு யோசிப்பாங்க, ஆனால், அவர்களுக்கு இந்த மீம்ஸ் கிரியேட்டர்கள், ரொம்ப யோசிக்காதீங்க, இந்த புது வருஷம் என்ன பண்ணலாம்னு நீங்க யோசிக்கிறதுக்கு முன்னாடி, இந்த புது வருஷம் நம்மல என்ன பண்ணலாம்னு யோசிச்சு வச்சிருக்கும் என்று மீம்ஸ் போட்டு கலாய்த்திருக்கிறார்கள்.
ஆண்டு முடிவை நகைச்சுவையாக வழியனுப்பும் வகையிலும் புத்தாண்டை ஜாலியாக வரவேற்கும் விதமாகவும் நெட்டிசன்கள் சிரிப்பை நிறுத்தவே முடியாத அளவுக்கு மீம்ஸ்களைப் போட்டு கலக்கி வருகின்றனர்.
சமூக ஊடகங்களிலும் இணையத்தில் வைரலாகி வரும் year ending மற்றும் புத்தாண்டு நகைச்சுவை மீம்ஸ்களை இங்கே பார்ப்போம். இந்த மீம்ஸ்கள் நகைச்சுவைக்காக மட்டுமே நம்பிக்கைக்கானது அல்ல.
2023-,ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை நாளில் வருவதால், பலரும் இந்த ஆண்டை மீம்ஸ்களால் கிண்டல் செய்து வருகின்றனர்.
இவரு திங்கள்கிழமை, செவ்வாய்க்கிழமைலாம் வரமாட்டாராமாம், ஞாயிற்றுக்கிழமைதான் வருவாராமாம் என்று கிண்டல் செய்து மீம்ஸ் போட்டு உள்ளனர்.
கல்லூரி படிக்கும் பிள்ளைகள் பலரும், தங்கள் பெற்றோர்களிடம் இந்த வருஷத்துல இருந்து காலேஜ் கட் அடிக்காம டெய்லியும் போவேன் என்று சொல்வது உண்டு. இதை வைத்தும் ஒரு மீம்ஸ் போட்டுள்ளனர்.
2022 வருடத்தில் நடந்த நிகழ்வுகள் அந்த ஆண்டிலும், வருகிற 2023 ஆண்டில் நடக்கும் நிகழ்வுகள் அந்த ஆண்டு நிகழ்வுகளாகவும் பதிவாகும். இதை வைத்து, சார்பட்டா மீம்ஸ் போட்டு கலாய்த்துள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"