ஏமனில் கடந்த 2015ம் ஆண்டு 5 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார். இந்தக் குற்றத்தில் ஏமன் காவல்துறையினர் அந்த இளைஞரை உடனே கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றத்தில் ஈடுபட்ட அந்த இளைஞருக்கு, எந்த வித மறு யோசனையும் இல்லாமல் மரண தண்டனை அளித்து ஏமன் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், சிறுமிக்கு இது போன்ற கொடுமை செயலை செய்த குற்றவாளியின் மரண தண்டனை அனைவருக்கும் பாடமாக இருக்க வேண்டும். எனவே அந்த இளைஞரை பொதுமக்கள் நடமாடும் இடத்தில் வைத்துச் சுட்டுக்கொல்ல வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.
இந்தத் தீர்ப்பை தொடர்ந்து, குற்றவாளி பொதுமக்கள் நடமாடும் இடத்திற்குக் கொண்டு வந்து கைகளை பின்னால் கட்டி துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். பின்னர் சடலத்தை பொதுமக்கள் பார்வைக்கு தொங்கச் செய்து காட்டினர். இந்தத் தீர்ப்பை பாராட்டி பொதுமக்கள் கோஷங்கள் எழுப்பி ஆதரவு தெரிவித்தனர்.
காஷ்மீர் கத்துவா சிறுமியின் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை அடுத்து இணையம் முழுவதும் இந்தத் தண்டனை வீடியோ வைரலாகி வருகிறது. இது போன்ற குற்றங்களில் ஈடுபடும் கயவர்களுக்கு பொது மக்கள் முன்னிலையில் மரண தண்டனை வழங்க இந்திய அரசு சட்டம் கொண்டு வந்து பாடம் கற்பிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பு : இச்சம்பவம் ஏமனில் நடந்தது. துபாயில் அல்ல.
,