யெஸ் பேங்குக்கு பிரச்சனைன்னா பே.டி.எம்.க்கு கொண்டாட்டம்! என்னப்பா இதெல்லாம்?

பே.டி.எம்.முக்கு போன்பே கொடுத்த பதிலடியை பார்த்து பல வாடிக்கையாளர்கள் தங்களின் ஆதரவை போன்பேவுக்கு தெரிவித்தனர்.

Yes Bank crisis PhonePe and Paytm end up in Twitter feud : யெஸ் பேங்கினை முழுமையாக  தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது ஆர்.பி.ஐ. கடன் மற்றும் பல்வேறு நிதி தொடர்பான பிரச்சனைகள் காரணமாக இந்த முடிவுக்கு வந்தது ஆர்.பி.ஐ.  மேலும் வாடிக்கையாளர்கள் ரூ. 50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுக்க முடியாத சூழலும் உருவாகியுள்ளது. இந்நிலையில் ஃபிளிப்கார்ட்டின் போன்பேவில் (PhonePe)  பலவிதமான சேவைகள் சில மணி நேரங்களுக்கு தடையானது. இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் பேமெண்ட்டான இந்த ப்ளாட்ஃபார்ம் தங்களின் அனைத்து பணப்பரிவர்த்தனைக்கும் யெஸ் பேங்கினையே நம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை சாக்காக வைத்துக் கொண்ட பே.டி.எம். தங்களின் ட்விட்டர் பக்கத்தில், போன்பேவை பே.டி.எம்.முடன் இணைந்து கொள்ள அழைப்பு விடுக்கின்றோம். ஏற்கனவே இப்படியாக நிறைய தத்தெடுத்திருக்கின்றோம். உங்களையும் விரைவில் எங்களுடன் இணைத்துக் கொள்வோம் என்று ட்வீட் வெளியிட்டிருந்தது.

To read this article in English

இந்த ட்வீட்டுக்கு உடனடியாக பதில் அளித்துள்ளது போன்பே. நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கும் படி உங்களின் பே.டி.எம் பிரச்சனையற்று சிறப்பாக இயங்ககூடிய பரிவர்த்தனை மையமாக இருந்திருந்தால் உங்களை நிச்சயமாக அழைத்திருந்திருப்போம். ஆனாலும் எங்களின் கூட்டாளி கீழே தவித்துக் கொண்டிருக்கும் போது இந்த பேக்-அப்பிற்கு அர்த்தமே இல்லை. ஃபார்ம் என்பது தற்காலிகமானது. ஆனால் க்ளாஸ் என்பது நிரந்தரமானது என்று பதில் அளித்தது.

ஆரம்பத்தில் சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக பணப்பரிவர்த்தனை நடைபெறவில்லை என்பதை போன்பேவின் கோஃபவுண்டர் அறிவித்திருந்தார். நீண்ட நேரம் செயல்பாடுகள் நடக்காத காரணத்தால் யெஸ் பேங்கினால் ஏற்பட்ட பிரச்சனைகளை மேற்கோள்காட்டி சமீர் நிகம் ட்வீட் செய்திருந்தார்.

பே.டி.எம்.முக்கு போன்பே கொடுத்த பதிலடியை பார்த்து பல வாடிக்கையாளர்கள் தங்களின் ஆதரவை போன்பேவுக்கு தெரிவித்தனர். க்ளாஸ் குறித்தும் தரம் குறித்தும் யார் பேச வேண்டும் என்பதை பலருக்கு நியாபகம் செய்துள்ளீர்கள் என்றும் வாடிக்கையாளர்கள் தங்களின் ஆதரவை தெரிவித்தனர்.

சிலருக்கு இந்த சண்டை நீடித்துக் கொண்டே இருந்தால் ஒரே எண்டெர்டெய்ன்மெண்ட்டாக இருக்கும் என்று நினைத்து கூகுள்பேவை கோர்த்துவிடவும் முயன்றனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Viral News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close