இமயமலையில் ஜீரோ டிகிரி குளிரில் யோகா: அசத்திய பாதுகாப்பு படை வீரர்கள்

சமீபத்தில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் இமயமலையில் யோகா செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் பரவலாக வைரலாகி வருகின்றன.

ராணுவ வீரர்கள் பெரும்பாலான சமயங்களில் கடுமையான சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். கடுமையான உடல் உழைப்பைக் கோரும் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். அவ்வாறு, இந்திய ராணுவத்தினர் மேற்கொள்ளும் பயிற்சிகளின் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகும்.

அப்படி, சமீபத்தில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையினரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இமயமலையின் உயர்ந்த மலை முகடுகளில் யோகா செய்யும் புகைப்படங்கள்தான் அவை.
உயர்ந்த மலைகளி, ஜீரோ டிகிரி நடுங்கும் குளிரில் யோகா செய்யும் புகைப்படங்கள், அப்படையினரின் வலிமையையும், உடல் ஆரோக்கியத்தையும் உணர்த்துவதாக அமைந்தன.

இந்த புகைப்படங்கள், இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்பு படையினரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டிருந்தது. இந்த பாதுகாப்பு படையினரின் அசாத்திய திறமையையும், வலிமையையும் கண்டு நெட்டிசன்கள் வியந்துள்ளனர்.

இந்தோ-திபெத் படையினரின் மலைக்க வைக்கும் மேலும் சில சாகச பயிற்சிகள் இதோ:

இமயமலையின் அழகிய புகைப்படங்கள் பலவற்றையும் இந்த ட்விட்டர் பக்கத்தில் அதிகம் காணலாம்.

×Close
×Close