viral video: யானைகள் தங்கள் கூட்டத்தில் வலுவான உறவுமுறை மற்றும் சமூகப் படிநிலைகளைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது. இளம் யானைகள் மூத்த யானைகள் கூட்டத்தில் உள்ள யானைகளால் கண்காணிக்கப்படுகின்றன. தற்போது, இரண்டு இளம் விடலை யானைகள் பலப் பரீட்சை நடத்திய விளையாட்டு சண்டை நிஜமான சண்டையாக மாறியபோது, மூத்த யானைகள் தலையிட்டு சமாதானம் செய்த வீடியோ நெட்டிசன்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.
இரண்டு இளம் யானைகள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டு விளையாடுவதை இந்த வீடியோ காட்டுகிறது. ஒரு கட்டத்தில், சற்றுப் பெரிய யானை இளைய யானையைத் தாக்கத் தொடங்குகிறது. இருப்பினும், இந்த சண்டை தீவிரமடைவதற்கு முன்பு, கூட்டத்திலிருந்து மூத்த யானைகள் தலையிட்டு நிறுத்துகின்றன. இளம் குட்டி யானை விரைவாக மூத்த யானைகளின் பாதுகாப்பை நாடுகிறது.
ஐ.எஃப்.எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வான் (@ParveenKaswan) இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அவர் இந்த வீடியோ குறித்து “சகோதரர்கள் சண்டையிடும்போது பெரியவர்கள் தலையிட வேண்டும்” என்று குறிபிட்டுள்ளார்.
இதுவரை, இந்த வீடியோ 51.5 ஆயிரம் பார்வைகளையும் மற்றும் நூற்றுக்கணக்கான கம்மெண்ட்களையும் பெற்றுள்ளது. வீடியோவைப் பற்றி கருத்துத் தெரிவித்த ட்விட்டர் பயனர் ஒருவர், “நான் சென்று அனைவரையும் கட்டிப்பிடித்து அவர்களுடன் விளையாட விரும்புகிறேன். அவர்கள் வல்லமையும் தெய்வீகமும் கொண்டவர்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம், இதேபோன்ற இளம் யானைகள் சண்டையிடும் வீடியோ வைரலானது. ஐ.ஏ.எஸ் அதிகாரி சுப்ரியா சாஹு பகிர்ந்த அந்த வீடியோ, யானைக் குட்டிகள் சாலையின் நடுவில் ஒன்றுடன் ஒன்று விளையாடுவதைக் காட்டியது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"