ஆழமான கிணற்றில் தவறி விழுந்த நாயை, இளம் பெண் ஒருவர் கயிறு கட்டிக்கொண்டு துணிச்சலாக கிணற்றில் இறங்கி காப்பாற்றியுள்ளார். இந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வைரலாகியுள்ளது.
வீரத்திலும் சாகசத்திலும் ஆண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல பெண்கள் என்பதை எல்லாக் காலத்திலும் பெண்கள் நிரூபித்து வந்துள்ளனர். அதிலும் 21-ம் நூற்றாண்டுப் பெண்கள் ஆண்களே மலைத்துப் போகிற அளவுக்கு எல்லாவற்றிலும் எல்லா தரப்பிலும் துணிச்சலாகவும் சிறப்பாகவும் செயல்பட்டு வருகின்றனர்.
அந்த வரிசையில், கர்நாடகாவில் மிக் ஆழமான கிணற்றில் நாய் ஒன்று தவறுதலாக விழுந்து உயிருக்கு போராடியுள்ளது. இதனைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், சில ஆண்களின் உதவியுடன் தனது இடுப்பில் கயிறுகட்டிக்கொண்டு ஆழமான அந்த கிணற்றில் இறங்கி நாயை கயிறு மூலமாக மீட்டு வெளியே விட்டுள்ளார். பின்னர், கிணற்றில் இருந்து வேகமாக் மேலே ஏறிவந்த அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
மிகவும் ஆழமான கிணற்றில் துணிச்சலாக இறங்கி நாயைக் காப்பாற்றிய அந்த இளம் பெண்ணை பலரும் பாராட்டி வருகின்றனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வைரல் ஆகிவருகிறது.