Advertisment

சித்தா படத்தின் ‘உனக்கு தான்’ பாடலை தேன் குரலில் பாடி அசத்திய பெண்... வைரல் வீடியோ

சித்தா படத்தில் இடம்பெற்றுள்ள ‘உனக்கு தான்’ பாடலை ஒரு பெண் தேன்குரலில் அழகாக பாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
girl song

‘உனக்கு தான்’ பாடலை ஒரு பெண் தேன்குரலில் அழகாக பாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சித்தா படத்தில் இருந்து  ‘உனக்கு தான்’ பாடலை ஒரு பெண் தேன்குரலில் அழகாக பாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவரது அற்புதமான குரலும் சரியான சுருதியும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

Advertisment

சித்தா படத்தில் இடம்பெற்றுள்ள  ‘உனக்கு தான்’ பாடலை சமீபத்தில் ஒரு பெண் பாடியுள்ளார். சந்தோஷ் நாராயணன் மற்றும் த்வானி கைலாஸ் பாடிய இந்த பாடலை இந்த பெண் தனது குரலில் பாடி பதிவிட்ட வீடியோ வைரலாகியுள்ளது.

இந்த பெண் கடந்த ஆண்டு டிசம்பரில்  ‘உனக்கு தான்’ பாடலை பாடும் வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். தனது பாடும் திறமையை சோதனைக்கு உட்படுத்துவதில் உற்சாகமாக, அந்தப் பெண் ஒரு புன்னகையைப் பூத்து, சமூக ஊடக பயனர்களைக் கேளுங்கள் என்று கூறுகிறார்.அவரது அற்புதமான குரல்வளமும் சரியான சுருதியும் காதுகளுக்கு விருந்தளிக்கும் வகையில் உள்ளது. இந்த பெண் ஆழ்ந்து முழு மனதுடன் பாடுகிறார். இவர் வேறு நாட்டைச் சேர்ந்தவராகத் தோன்றினாலும், திறமையான பாடகியாக உனக்கு தான் என்ற பாடலைப் பிழையின்றிப் பாடி பெருமையுடன் புன்னகை பூக்கிறார்.

‘உனக்கு தான்’ பாடலைப் பாடிய பெண்ணின் வீடியோ இணையத்தில் வெளியான உடனேயே, இணைய சமூகம் அந்த பெண்ணுக்கு பாராட்டுக்களை குவித்தது.

“புரிந்துகொள்ளுதல் 0%.. 100% அதிர்வு,” என்று ஒரு பயனர் கருத்து தெரிவித்தார்.  “உண்மையில் இந்த வரிகளின் அர்த்தம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை... ஆனால், நான் அதைக் கேட்கும் போது ரசித்தேன். கொல்லும் குரல்” என்று மற்றொருவர் கேலி செய்தார். 

“அவரது குரல் அற்புதம்” என்று மற்றொரு நபர் கம்மெண்ட் செய்துள்ளார். இசை ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும் இந்த பெண்ணைப் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

இதுவரை, இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் 25.9 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும் 1.9 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளையும் பெற்றுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Viral Video
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment