சங்கம் முக்கியமா…? சாப்பாடு முக்கியமா…? வைரலாகும் சிறுவனின் க்யூட் வீடியோ

'எனக்கு பசிக்கும்-ல, நான் சாப்டுட்டு வரக் கூடாதா'

By: December 30, 2018, 5:18:52 PM

அனைவரும் புத்தாண்டை வரவேற்கக் காத்திருக்கின்றனர். 2018ம் ஆண்டில் எவ்வளவோ வீடியோக்கள் இணைய தளங்களையே ஆக்கிரமித்தன. அதில், நம்மூர் சிறுவன் ஒருவன் தன் அம்மாவிடம், “அடிக்காம திட்டாம குணமா வாயால சொல்லணும்”-னு மழலை குரலில் பேசிய வீடியோ செம வைரலானது.

அப்படியொரு வீடியோ ஒன்று வருடக் கடைசியில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், சிறுவனின் உறவினர் ஒருவர், “இளைஞர் அணி சங்கத்துல நீ சேர்ந்துட்ட.. போய் உங்கப்பாட்ட 2000 ரூபா பணம் வாங்கிட்டு வா” என்று சொல்கிறார். அதற்கு ‘ம்’ என்று தலையாட்டிவிட்டு நகரும் சிறுவனிடம், ‘திரும்ப வருவியா?’ என அவர் கேட்டதும் ‘சாப்டுட்டு வரேன்’ என்கிறான் அப்பாவியாய். அதற்கு அந்த உறவினர், ‘சாப்டுட்டு வறியா?… சங்கம் முக்கியமா, சாப்பாடு முக்கியமா?’ என்று கேட்க, ‘சாப்பாடு தான் முக்கியம்’ என்று எதார்த்தத்தைச் சொல்ல, அவர் மீண்டும் அதட்டி கேட்க, ‘எனக்கு பசிக்கும்-ல, நான் சாப்டுட்டு வரக் கூடாதா’ என்று சிறுவன் அழ ஆரம்பித்துவிடுகிறான்.

நமக்கு சோறு தான் முக்கியம்!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Young kid viral video

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X