15 பவுனும், பல்சர் அப்பாச்சியும் போதுமாம்: இப்படி எல்லாமாடா பெண் தேடுறீங்க..!

இளைஞர் ஒருவர் தனக்கு 15 பவுன் நகை, பல்சர் இல்லைன அப்பாச்சி, ராயல் என்ஃபீல்டு பைக், 50 ஆயிரம் ரூபாய் வரதட்சனையுடன் திருமணம் செய்து கொள்ள பெண் வேண்டும் என்று டிக்டாக்கில் வெளியிட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்ப்பவர்கள் இந்த காலத்தில் இப்படியெல்லாமா…

By: April 25, 2020, 5:14:47 PM

இளைஞர் ஒருவர் தனக்கு 15 பவுன் நகை, பல்சர் இல்லைன அப்பாச்சி, ராயல் என்ஃபீல்டு பைக், 50 ஆயிரம் ரூபாய் வரதட்சனையுடன் திருமணம் செய்து கொள்ள பெண் வேண்டும் என்று டிக்டாக்கில் வெளியிட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்ப்பவர்கள் இந்த காலத்தில் இப்படியெல்லாமா பெண் தேடுகிறீர்கள் என்று விமர்சித்து வருகின்றனர்.

தற்போது ஒருவருக்கு வேலை கிடைப்பதைவிட திருமணம் செய்துகொள்வதற்கு பெண் கிடைப்பதுதான் குதிரைக் கொம்பாக உள்ளது. தற்போது இளைஞர்கள் பலரும் ஒரு நிரந்தர வேலையோ அல்லது நிரந்தர வருமானமோ கிடைத்து செட்டில் ஆகும்போது அவர்களுக்கு 30-35 வயதைக் கடந்தவர்களாக இருக்கிறார்கள். நிரந்தர வேலை, வருமானம் கிடைத்தவுடன் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று இருந்த பல இளைஞர்களுக்கு நிரந்தர வேலை, வருமானம் கிடைத்த பிறகு திருமணம் செய்துகொள்ள பெண் கிடைப்பது என்பது பெரிய பிரச்னையாகவே இருக்கிறது.

இளைஞர்கள் திருமணம் செய்துகொள்வது என்பது இன்றைக்கு ஒரு சவாலான பிரச்னையாக மாறியிருக்கும் நிலையில், இளைஞர் ஒருவர் தங்கள் வீட்டில் பெண் பார்த்துக்கொண்டிருப்பதாகவும் தனக்கு எந்த மாதிரி பெண் வேண்டும் என்றால் 15 சவரன் நகை, பல்சர், அப்பாச்சி அல்லது ராயல் என்ஃபீல்டு பைக், 50,000 ரூபாய் பணம் வரதட்சனையுடன் 20-25 வயதுக்குள் விவசாய வேலைகள் தெரிந்த பெண் வேண்டும் என்று பெண் பார்க்க கேட்டு டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த பலரும் நாட்டில் பல இளைஞர்கள் ஒருலட்சம் ரூபாய் சம்பளம் வாங்குகினாலும் வரதட்சனை இல்லாமல் பெண் கேட்டும்போதே பெண் கிடைக்காமல் இருக்கிறார்கள். உனக்கு 15 சவரன், நகை அப்பாச்சி பைக், ரூ.50 ஆயிரம் வரதட்சனையுடன் பெண் வேண்டுமா? அந்த பெண் உங்க வீட்டில் வந்து சாணி அள்ளனுமா என்று பெண் பார்க்க கேட்ட இளைஞரை கலாய்த்து வருகின்றனர். சிலர் இப்படியெல்லாமாடா பெண் தேடுகிறீர்கள் என்று கேட்டுள்ளனர்.

திருமணத்தின் போது வரதட்சனை வாங்குவதும் கொடுப்பதும் சத்தமில்லாமல் நடக்கிற ஒன்றாக உள்ளது. எவ்வளவு வரதட்சனை கேட்கிறார்கள் என்பது சம்பந்தப்பட்ட மாப்பிள்ளை மணமகள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மத்தியில் மட்டும்தான் தெரிந்த ஒன்றாக இருக்கும். அதிலும் இந்த இளைஞர் வெளிப்படையாக ஒரு சமூக ஊடகத்தில் இவ்வளவு வரதட்சனையுடன் பெண் வேண்டும் என்று வீடியோ வெளியிட்டிருப்பது அதிர்ச்சியையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Young man seeking a girl to marry with dowry viral video

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X