New Update
/indian-express-tamil/media/media_files/2025/03/17/q873CoiY7nU2N5SPLAvg.jpg)
மலைப்பாதையில் திடீரென எதிரே வந்த சிங்கங்களைப் பார்த்து பயந்த இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள், பைக்கை விட்டுவிட்டு தெறித்து ஓடிய வீடியோ
குஜராத்தில் மலைப்பாதையில் திடீரென எதிரே வந்த சிங்கங்களைப் பார்த்து பயந்த இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள், இரு சக்கர வாகனத்தை விட்டுவிட்டு தெறித்து ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மலைப்பாதையில் திடீரென எதிரே வந்த சிங்கங்களைப் பார்த்து பயந்த இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள், பைக்கை விட்டுவிட்டு தெறித்து ஓடிய வீடியோ
குஜராத்தில் மலைப்பாதையில் திடீரென எதிரே வந்த சிங்கங்களைப் பார்த்து பயந்த இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள், இரு சக்கர வாகனத்தை விட்டுவிட்டு தெறித்து ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வனவிலங்குகள் எப்போது மனிதர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாக இருக்கிறது. சமூக ஊடகங்களின் காலத்திலும் வைரலாகும் வீடியோக்களில் கனிசமானவை வனவிலங்குகள் வீடியோதான். வனவிலங்குகள் பற்றி விசிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, ஐ.எஃப்.எஸ் அதிகாரிகள் காடுகளில் பதிவாகும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றன. அந்த வீடியோக்கள், நெட்டிசன்கள் மத்தியில், வனவிலன்குகளைப் பற்றிய ஆர்வத்தை தூண்டுவதுடன், விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு மட்டுமில்லாமல் விவாதங்களையும் ஏற்படுத்தி வருகின்றன.
அந்த வகையில், குஜராத்தில், மலைப்பாதையில் திடீரென திடீரென எதிரே வந்த சிங்கங்களைப் பார்த்த இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள், இரு சக்கர வாகனத்தை விட்டுவிட்டு தெறித்து ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்தா நந்தா பகிர்ந்த எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில், காட்டில் ஒரு மலைப் பாதையில் இரண்டு சிங்கங்கள் செல்கின்றன. சிங்கங்கள் திடீரென எதிரே வருவதைப் பார்த்த அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள், அச்சத்தில் பைக்கில் இருந்து இறங்கி தெறித்து ஓடியா வீடியோ வைரலாகி வருகிறது. ஆனால், அந்த சிங்கங்கள் அவர்களை விரட்டவும் இல்லை, அச்சுறுத்தவும் இல்லை. அதன் போக்கில் போய்க்கொண்டிருக்கின்றன.
Another day in Gujurat😃
— Susanta Nanda (@susantananda3) March 16, 2025
The lion pair is just not interested in human as its prey. Otherwise, it could have easily outpaced the running bikers. pic.twitter.com/Rogc1ydJGx
இந்த வீடியோ குறித்து ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்தா நந்தா குறிப்பிடுகையில், “குஜராத்தில் மற்றுமொரு நாள், ஜோடி சிங்கங்கள் மனிதனை இரையாகக் கொள்வதில் ஆர்வம் இல்லை. அப்படி இல்லையென்றால், சிங்கங்கள் இறங்கி ஓடும் பைக்கர்களை எளிதாக துறத்தி பிடித்திருக்கும்.” என்று பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ குறித்து ஒரு பயனர் கருத்து தெரிவிக்கையில், “பைக் வேலை செய்யாமல் போனால், பைக்கை விட்டுவிட்டு கால்களால் ஓடுவதில் என்ன பயன்? பைக்கை ஸ்டார்ட் செய்துவிட்டு நகர்ந்தால் அவர்கள் பாதுகாப்பாக தப்பித்துவிடுவார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.
மற்றொரு பயனர், “இது பல வருடங்களாக சாதுவான குஜராத்தி சைவ உண்ணி, சிங்கங்களுக்கு எப்போதும் வேலை செய்யும்.” என்று நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.
மூன்றாவது பயனர், “அரசாங்கம் காடுகளுக்குள் சாலைகள் அமைக்கக் கூடாது. மனிதர்களை ஒருபோதும் உள்ளே அனுமதிக்கக் கூடாது. உள்ளே நுழைந்தால் தண்டிக்கப்பட வேண்டும். நீர்நிலைகளை உருவாக்கி, சிங்கங்களுக்கு நிழல் தர நிறைய மரங்களை நட வேண்டும்.” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.