New Update
/indian-express-tamil/media/media_files/2024/11/16/OaCuPWjnrMu7K0BH0LjT.jpg)
வானதி சீனிவாசனின் செய்தியாளர் சந்திப்பின் போது, இளைஞர் ஒருவர் விஜய்யின் புகைப்படத்தை தனது செல்போனில் காண்பித்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவசனின் செய்தியாளர் சந்திப்பில், இளைஞர் ஒருவர் விஜய்யின் புகைப்படத்தை காண்பித்தார்.
கோவை தெற்கு தொகுதியின் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருபவர் வானதி சீனிவாசன். இவர் அண்மையில் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றார். தற்போது அது தொடர்பான வீடியோ வைரலாக பரவி வருகிறது.
செய்தியாளர்களின் கேள்விக்கு வானதி சீனிவாசன் பதிலளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் வந்து நின்ற இளைஞர் ஒருவர், திடீரென தனது செல்போனில் இருந்த நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யின் புகைப்படத்தைக் காண்பித்து விட்டு, அங்கிருந்து சென்றார்.
இந்த வீடியோ தற்போது விஜய் ரசிகர்கள் மற்றும் த.வெ.க தொண்டர்களால் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.
பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, இளைஞர் ஒருவர் நடிகர் விஜய்யின் புகைப்படத்தை காட்டிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வருகிறது#TVKVijay #vanathisrinivasan pic.twitter.com/ypRuy8OqRe
— Indian Express Tamil (@IeTamil) November 16, 2024
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.