“ரூல்ஸ் எல்லாருக்கும் ஒன்னு தான்”; ஃபைன் போட்ட டிராபிக் போலீஸே விதியை மீறியதால் விரட்டி பிடித்த இளைஞர்: வைரல் வீடியோ

மகாராஷ்டிராவில் தனக்கு அபராதம் விதித்த டிராபிக் போலீஸ், ஹெல்மெட் அணியாமல், தெளிவில்லாத நம்பர் பிளே உள்ள இரு சக்கர வாகனத்தில் அமர்ந்து சென்றதைப் பார்த்த இளைஞர், “ரூல்ஸ் எல்லாருக்கும் ஒன்னு தான்” என்று டிராபிக் போலீஸை இளைஞர் விரட்டிப் பிடித்த வீடியோ வைரலாகி வருகிறது.

மகாராஷ்டிராவில் தனக்கு அபராதம் விதித்த டிராபிக் போலீஸ், ஹெல்மெட் அணியாமல், தெளிவில்லாத நம்பர் பிளே உள்ள இரு சக்கர வாகனத்தில் அமர்ந்து சென்றதைப் பார்த்த இளைஞர், “ரூல்ஸ் எல்லாருக்கும் ஒன்னு தான்” என்று டிராபிக் போலீஸை இளைஞர் விரட்டிப் பிடித்த வீடியோ வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
youth chasing traffic police 2

இந்த வீடியோவில், இளைஞர் ஸ்கூட்டருக்கு பின்னால் ஓடிச் சென்று, அதன் பின்னால் உள்ள கைப்பிடியைப் பிடித்துக்கொள்கிறார், அதன் பின்னர் காவலர்கள் ஸ்கூட்டரை நிறுத்துகின்றனர். Photograph: (Image Source: x/ @maratha_marathi)

மகாராஷ்டிரா மாநிலம், தானே மேற்குப் பகுதியைச் சேர்ந்தவர் என்று கூறப்படும் ஒரு இளைஞர், 2 போக்குவரத்துக் காவலர்கள் சென்ற ஸ்கூட்டரைத் விரட்டிச் சென்று பிடித்தார். அந்தக் காவலர்கள் ஓட்டி வந்த வாகனத்தின் பதிவு எண் சரியாகத் தெரியாத நிலையில் நம்பர் பிளே பொருத்தப்பட்டிருந்த வாகனம் ஓட்டியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். 

Advertisment

மேலும், அந்த இளைஞர் தனது நண்பர் ஒருவருடன் இணைந்து இந்தச் சம்பவத்தை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

வீடியோவைப் பாருங்கள்:

இந்த வீடியோவில், இளைஞர்களில் ஒருவர் போக்குவரத்து போலீஸார் ஓட்டிச் சென்ற ஸ்கூட்டருக்குப் பின்னால் ஓடுவதையும், மற்றவர் அதைப் பதிவு செய்வதையும் பார்க்க முடிகிறது. ஸ்கூட்டரில் செல்லும் டிராபிக் காவலர்களில் பின்னால் அமர்ந்திருப்பவர் ஹெல்மெட் அணியவில்லை. பின்னால் அமர்ந்திருப்பவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது போக்குவரத்து விதிமுறைகளின் கீழ் கட்டாயம். 

Advertisment
Advertisements

இந்த வீடியோவில், இளைஞர் ஸ்கூட்டருக்கு பின்னால் ஓடிச் சென்று, அதன் பின்னால் உள்ள கைப்பிடியைப் பிடித்துக்கொள்கிறார், அதன் பின்னர் காவலர்கள் ஸ்கூட்டரை நிறுத்துகின்றனர்.

வீடியோவைப் பதிவு செய்யும் அந்த நபர், “நம்பர் பிளேட் தெரியவில்லை” என்று கூறுவது கேட்கிறது. அதற்கு போலீஸ்காரர்களில் ஒருவர், “இந்த வாகனம் எங்களுடையது அல்ல; இதைக் கைப்பற்றுவதற்காக இங்கே கொண்டு வந்தோம்” என்று பதிலளிக்கிறார்.

அதற்கு அந்த இளைஞர், “கைப்பற்றப்பட வேண்டிய வாகனத்தை நீங்கள் எப்படி ஓட்டி வரலாம்?” என்று கேள்வி எழுப்புகிறார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

தானே காவல் துறை விளக்கம்

இந்த வைரல் வீடியோவுக்கு தானே காவல்துறை பதிலளித்துள்ளது. எக்ஸ் தளத்தில் இதுகுறித்து கருத்து தெரிவித்த தானே காவல்துறை, “வைரலான வீடியோவில், வாக்குவாதத்தில் ஈடுபட்ட 2 நபர்களில் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டியது கண்டறியப்பட்டது. இதையடுத்து, விதிமுறைகளின்படி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போலீஸ் நடவடிக்கையால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த இளைஞர்கள், கைப்பற்றப்பட இருந்த மோட்டார் சைக்கிளின் நம்பர் பிளேட் தெளிவாகத் தெரியவில்லை என்று வாதிட்டுள்ளனர்.” என்று தெரிவிகப்பட்டுள்ளது.

இந்த வீடியோ தவறாக வழிநடத்துவதாக தானே காவல்துறை கூறியுள்ளதுடன், ஸ்கூட்டரின் நம்பர் பிளேட் தொடர்பாக அந்த வாகனத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதை உறுதி செய்தது.

Viral Video

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: