இந்த ரிஸ்க் தேவையா? கிணற்றுக்குள் தலை கீழாக தொங்கியபடி கொடூர பாம்பை காப்பாற்றும் இளைஞர் - youth take risk to rescue Dangerous Snake Viral Video | Indian Express Tamil

இந்த ரிஸ்க் தேவையா? கிணற்றுக்குள் தலை கீழாக தொங்கியபடி கொடூர பாம்பை காப்பாற்றும் இளைஞர்!

கிணற்றில் இருந்து கொடிய விஷம் மிக்க பாம்பை இளைஞர் ஒருவர் தலைகீழாக தொங்கியபடி மீட்க முயற்சி செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

youth rescue cobra from well, viral video, cobra rescue from well viral video, kerala, cobra rescue,

சமூக ஊடகங்களின் காலத்தில் தினமும் ஆயிரக் கணக்கான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அதிலும், வனவிலங்குகள், பாம்பு வீடியோ என்றால் எக்கச்சக்கமாக வைரலாகி இணையத்தையே ஒரு கலக்கு கலக்கிவிடும்.

அந்த வகையில், கிணற்றில் இருந்து கொடிய விஷம் மிக்க பாம்பை இளைஞர் ஒருவர் தலைகீழாக தொங்கியபடி மீட்க முயற்சி செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், ஒரு இளைஞர் ஆழமான கயிற்றின் உதவியுடன் கிணற்றுகுள் சென்று, கிணற்றில் இருக்கும் பாம்பின் வாலை பாம்பு பிடிக்கும் வளைவான கம்பியில் பாம்பு பிடிக்கப்படுகிறது. கிணற்றில் இருந்து அந்த கொடிய விஷம் கொண்ட கொடூர பாம்பை தலை கீழாக தொங்கியபடி ரிஸ்க் எடுத்து மீட்கிறார். பாம்பை காப்பாற்றும்போது, அது அவரை கடிக்க முயற்சி செய்கிறது. ஆனால், ரிஸ்க் எடுத்து காப்பாற்றுகிறார்.

இந்த சம்பவம் எப்போது, எங்கு நடந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை. கொடிய விஷப் பாம்பை கிணற்றில் இருந்து காப்பாற்றிய கேரள மனிதர், துணிச்சலான வீரர் என்று குறிப்பிட்டு இந்த வீட்யோ வைரலாக பரவி வருகிறது. ஆனால், பலரும்,

ப்ஒரு கொக்கியில் தன்னை போர்த்திக்கொண்ட போதிலும், பாம்பு மீண்டும் மீண்டும் அவரை கடிக்க முயற்சிக்கிறது. எனினும், இந்த சம்பவம் எப்போது, எங்கு நடந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை. நீண்ட மலைப்பாம்பு பாம்பை கிணற்றில் இருந்து காப்பாற்றிய கேரள மனிதரின் துணிச்சலான செயல் வைரலாக பரவி வருகிறது.

அதே நேரத்தில், இந்த வீடியோவைப் பார்த்த பலரும் இந்த ரிஸ்க் தேவையா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். உண்மையில், அவ்வளவு கொடிய விஷம் கொண்ட பாம்பை கிணற்றுக்குள் தலைகீழாக தொங்கியபடி அவ்வளவு ரிஸ்க் எடுக்க வேண்டுமா என்று கேட்டு வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Youth take risk to rescue dangerous snake viral video