ஒரு கிராமத்தில் இளைஞர்கள் கூட்டமாக வெறும் கைகளால் சிறுத்தையைப் பிடித்துக் அழுத்தி சித்திரவதை செய்தபடி வரும் அதிர்ச்சி வீடியோவை ஐ.எஃப்.எஸ் அதிகாரி சமூகக் வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் சிறுத்தைக்காக பரிதாபப்பட்டு வருகின்றனர்.
இந்த பூமி மனித இனத்துக்கானது மட்டுமல்ல, எல்லா உயிரினங்களுக்குமானதுதான். ஆனால், மனிதன் இந்த பூமியின் மீதும் பூமியில் உள்ள மற்ற உயிரினங்களின் மீதும் ஆதிக்கம் செலுத்துகிறான். மனிதனின் இயற்கையை அச்சுறுத்தும் வளர்ச்சியால், சுற்றுச்சூழல் மாசுபாடு, மற்ற உயிரினங்களுக்கும் பாதிப்பு என்று ஆபத்தான நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இதற்கு காரணம், இந்த சமூக ஊடக யுகங்களின் காலத்தில், இன்னும் வனவிலங்குகளைப் பற்றிய போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை என்றே சில சம்பவங்களைப் பற்றிய செய்திகள் உணர்த்துகின்றன.
வனவிலங்குகளைப் பற்றிய விழிப்புணர்வையும் புரிதலையும் ஏற்படுத்துவதற்காக ஐ.எஃப்.எஸ் அதிகாரிகள் சமூக வலைதளங்களில் வனத்தில் பதிவாகும் வீடியோக்களை வெளியிட்டு வனத்துறையினரின் பணிகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், ஒரு கிராமத்தில் இளைஞர்கள் கூட்டமாக வெறும் கைகளால் சிறுத்தையைப் பிடித்துக் அழுத்தி சித்திரவதை செய்தபடி வரும் அதிர்ச்சி வீடியோவை ஐ.எஃப்.எஸ் அதிகாரி சிவகுமார் கங்கல் சமூகக் வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் சிறுத்தைக்காக பரிதாபப்பட்டு வருகின்றனர்.
இந்த வீடியோவில், ஆண்கள், இளைஞர்கள், சிறுவர்கள் கூட்டமாக ஒர் வெறித்தனத்துடன் ஏதோ ஒன்றைப் பிடித்துக்கொண்டு வருகிறார்கள். அது என்ன வென்று பார்த்தால் அவர்கள் ஒரு சிறுத்தையை வெறும் கைகளால் பிடித்துக்கொண்டு வருகிறார்கள். அவர்கள் அந்த சிறுத்தையின் கால்களை ஆளுக்கொரு பக்கம் பிடித்துக்கொண்டு வருகிறார்கள். ஒரு இளைஞர் அந்த சிறுத்தையின் கழுத்தை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு வருகிறார். அந்த சிறுத்தை பீதியில் திணறுகிறது. அதன் கண்கள் நீலம் பூத்து மிரட்சியில் இருக்கிறது. அந்த சிறுத்தையைப் பார்க்கவே பரிதாபகரமான நிலையில் இருக்கிறது. இளைஞர்கள் சிறுத்தையை சித்திரவதை செய்யும் வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் சிறுத்தைக்காக பரிதாபம் தெரிவித்து வருகின்றனர்.
Conservation and coexistence shouldn't just be buzzwords of social media. Only when the people torturing the leopard in this video realize the ecological significance and fragility of the animal and act upon it, conservation is said to have truly progressed. pic.twitter.com/XsAuagW85F
— Shivakumar Gangal, IFS (@shivgangal_ifs) December 21, 2024
இந்த வீடியோ குறித்து ஐ.எஃப்.எஸ் அதிகாரி சிவகுமார் கங்கல் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிடுகையில், “பாதுகாப்பு மற்றும் சகவாழ்வு என்பது சமூக ஊடகங்களின் முக்கிய வார்த்தைகளாக இருக்கக்கூடாது. இந்த காணொளியில் சிறுத்தையை சித்திரவதை செய்யும் நபர்கள், அந்த விலங்கின் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் மற்றும் பலவீனத்தை உணர்ந்து செயல்படும் போதுதான், பாதுகாப்பு உண்மையிலேயே முன்னேறியதாக கூறப்படும்” என்று தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.
இந்த வீடியோவைப் பார்த்த பயனர் ஒருவர், “சார்..... அந்த இளைஞர்களைப் பார்க்கும்போது, நம் கல்வி முறை நம்மைத் தோல்வியடையச் செய்துள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. பரிதாபமாக இருக்கிறது. ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களைப் பார்க்கும்போது இன்னும் பரிதாபமாக இருக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பயனரின் கருத்துடன் முழுவதும் ஒப்புக்கொள்வதாக சிவகுமார் கங்கல் தெரிவித்துள்ளார்.
மற்றொரு பயனர், “கொடூரமானது, சிறுத்தை உயிருடன் இருக்கும் என்று நம்புகிறேன், இந்த அரக்கர்கள் மீது வனத்துறை மற்றும் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.” என்று தெரிவித்துள்ளார்.
இன்னொரு பயனர், “அவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்கிறார்கள்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
மற்றொரு எக்ஸ் பயனர், “ஒடிசாவில் வனச்சூழல் மற்றும் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் குறிவைக்கப்படுவதைப் பாருங்கள், யானைகள் நடமாட்டம் காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே, ஒடிசாவின் முதல்வர், வனக்காப்பாளர் பணி நியமனத்தை விரைவில் முடிக்க வேண்டும்.” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.