New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/10/sachin-5.jpg)
youtube trending video
மஹாலுக்கு சென்றவுடனே தேடும் முதல் முகம் டூரிஸ்ட் கைடு பிரபு தான்
youtube trending video
youtube trending video : மதுரை செல்பவர்கள் அனைவரும் மிஸ் பண்ணக்கூடாத இடங்களில் மதுரை நாயக்கர் மஹாலும் ஒன்று. கட்டிட காலத்திற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக திகழும் மதுரை நாயக்கர் மஹால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் இடமாகும்.
நாள் ஒன்றுக்கு மதுரை நாயக்கர் மஹாலின் வரலாறை தெரிந்துக் கொள்ளவே ஆயிரக்கணக்கான வெளிநாட்டு சுற்றுலாவாசிகள் மஹாலுக்கு படையெடுத்து வருகின்றனர். அப்படி தேடி செல்பவர்கள் மஹாலுக்கு சென்றவுடனே தேடும் முதல் முகம் டூரிஸ்ட் கைடு பிரபு தான்.
இங்கிருக்கும் டூரிஸ்ட் கைடுகளில் பிரபு தான் டாஸ் ஃபேமஸ். இவரின் அபிநயங்கள், ஆங்கில உச்சரிப்பு, நடன அசைவுகள் இவற்றை பார்த்து வியக்காத சுற்றுலாவாசிகளே இல்லை. உள்ளூர் மக்கள் தொடங்கி வெளிநாட்டு சுற்றுலா வாசிகள் வரை அனைவரும் பிரபுவை தான் தேடி செல்கின்றனர்.
இதுவரை மதுரையில் மட்டுமே ஃபேமஸான டூரிஸ்ட் பிரபு. கடந்த இரண்டு நாட்களாக ஒட்டு மொத்த இணையத்தையும் புரட்டி போட்டுள்ளார். அண்மையில் கேரளா கத்தக்களி நடனம் குறித்து டூரிஸ்ட் பிரபு சுற்றுலாவாசிகளிடம் பாடல், நடனத்துடன் விளக்கிக் கொண்டிருந்தார். இதை அவர்கள் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ சில மணி நேரங்களில் வாட்ஸ்ப் அப்பில் பரவியது. அடுத்த 2 நாட்களில் ஃபேஸ்புக், ட்விட்டர் என ஒட்டு மொத்த இணையத்திலும் பரவி இப்போது பிரபு பாப்புலராகி விட்டார். திறமைகள் எங்கிருந்தாலும் அது ஊக்குவிக்கபட வேண்டும்.
அந்த வகையில் டூரிஸ்ட் கைடு பிரபுவிடம் இருக்கும் இந்த தனித்திறமை இணையவாசிகளால் அதிகளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.