Advertisment

மொத்த கவலையும் மறந்து சாண்டி மகளுடன் குழந்தையாகவே மாறிய கவின்.. வைரல் வீடியோ!

லாலாவுடன் கவின் வண்டி ஓட்டி குழந்தை போலவே விளையாடும் இந்த வீடியோ கவின் ரசிகர்களை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
youtube viral video

youtube viral video

youtube viral video : பிக் பாஸ் வீட்டில் இருந்து நல்ல நண்பர்கள், மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை சம்பாதித்து விட்டு கிளம்பிய கவின் தன்னுடைய அனைத்து கவலைகளையும் மறந்து சாண்டி மாஸ்டர் மகள் லாலாவுடன் குழந்தையாகவே மாறி விளையாடும் வீடியோ இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

Advertisment

இந்த முறை பிக் பாஸ் சீசன் 3 தொடங்கிய நாளிலிருந்து அனைவரின் பார்வையும் கவின் பக்கம் தான். அது என்ன மந்திரமோ, மாயமோ தெரியவில்லை நிகழ்ச்சி தொடங்கிய 2 ஆவது நாளே கவினுக்கு ஆர்மி ரெடியாகி விட்டது. சோஷியல் மீடியாவில் அவருக்காக ஓட்டு சேகரிக்க ஏகப்பட்ட ஃபேன்ஸ் பக்கங்கள். கடைசியில் 5 லட்சம் பணத்துடன் கவின் வெளியே வந்த போது கூட அவர் தான் இதயத்தை வென்ற பிக் பாஸ் போட்டியாளர் என்றெல்லாம் வாழ்த்துக்கள் பறந்தன. பிக் பாஸ் நிகழ்ச்சி விழாவில் கேம் சேன்ஞர் என்ற டைட்டிலும் கவினுக்கு வழங்கப்பட்டது.

கவின் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது அவரின் குடும்பத்தினர் சிக்கலில் மாட்டிக் கொண்டு சிறை சென்றன. இந்த தகவல் உள்ளே இருந்த கவினுக்கு தெரியுமா?> தெரியாதா? என்பது கூட நமக்கு தெரியவில்லை. ஆனால் 5 லட்சத்துடன் வெளியே வந்த கவின் செய்த முதல் வேலை தனது தாய் மற்றும் உறவினர்களை ஜாமீனில் வெளியே எடுத்தது.

அதன் பின்பு சமூகவலைத்தளங்களில் தனக்கு இருக்கும் அன்பு மற்றும் சில எதிர்மறை விமர்சனங்களை பற்றி தெரிந்துக் கொண்ட கவின் அதற்கு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிலும் அளித்தார். இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் நிஜமான அண்ணன் தம்பி போலவே வாழ்ந்து காட்டிய சாண்டி மாஸ்டர்- கவினின் புதிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த சாண்டி மாஸ்டர், தன்னுடைய இல்லத்தில் சிறப்பு விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்த விருந்தில் கவின், தர்ஷன், அபிராமி, முகென் ராவ் ஆகியோர் கலந்துக் கொண்டனர். அப்போது சாண்டியின் செல்ல மகள் லாலாவுடன் கவின் கொஞ்சி விளையாடி மகிழ்ந்துள்ளார். லாலாவுடன் கவின் வண்டி ஓட்டி குழந்தை போலவே விளையாடும் இந்த வீடியோ கவின் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. பார்ப்பதற்கே இந்த வீடியோ க்யூட்டாக இருப்பதாக நெட்டிசன்கள் கூறியுள்ளனர்.

Viral Social Media Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment