சமீபத்தில் சீனாவுக்குச் சென்ற இந்திய யூடியூபர் ஒருவர், சீனாவின் ரயிலில், பொது வகுப்பு ரயில் பெட்டிகளையும் இந்தியாவில் உள்ள ரயில்களில் பொது வகுப்பு ரயில் பெட்டிகளையும் ஒப்பிட்டு, இரு நாடுகளின் பயண அனுபவங்களுக்கிடையே உள்ள ஒற்றுமைகளைக் காட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்திய ரயில்களில் பொதுவாகக் காணப்படும் கழிவறைகளுக்கு அருகில் தரையில் அமர்ந்திருக்கும் பயணிகளை யூடியூபர் காட்டுகிறார்.
ஆங்கிலத்தில் படிக்க: Watch: YouTuber shows similarities between Chinese and Indian general train coaches, video goes viral
இந்த வைரல் வீடியோவில், யூடியூபர் புல்லட் ரயிலில் இருக்கிறார். பல பயணிகள் அமர்ந்திருப்பதையும், சிலர் கழிப்பறை பகுதிக்கு அருகில் நிற்பதையும் காணலாம். பல பயணிகள் தங்கள் சொந்த நாற்காலிகளையும் வாளிகளையும் ரயிலில் கொண்டு வருவதை யூடியூபர் வீடியோவில் காட்டியுள்ளர். சில பயணிகள் இருக்கைக்கு அடியில் இருந்த இடத்தையும் ஆக்கிரமித்துள்ளனர்.
ஜெம்ஸ் ஆஃப் இன்ஜினியரிங் என்ற எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டு எழுதியிருப்பதாவது: “இந்திய யூடியூபர் இந்திய பொது வகுப்பைப் (ஜெனரல் கம்பார்ட்மெண்ட்) போலவே சீன பொது வகுப்பைக் கண்டறிந்துள்ளார். ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால், இவற்றில் ஏசி & தானியங்கி கதவுகள் உள்ளன. மக்கள் கழிவறைக்கு வெளியே அமர்ந்து வாளிகள் மற்றும் நாற்காலிகளுடன் பயணம் செய்கிறார்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா - சீனா ரயில்களில் ஜெனரல் கம்பார்ட்மெண்ட்டில் உள்ள ஒற்றுமைகள்: இந்த வீடியோவைப் பாருங்கள்.
Indian YouTuber finds the Chinese General Class similar to the Indian General Class. The only difference is that these have AC & Automatic Doors.
— Gems of Engineering (@gemsofbabus_) September 20, 2024
People are sitting outside the washroom and traveling with buckets and their chairs. 🤷🏽♂️pic.twitter.com/KgpA9D1LeO
செப்டம்பர் 20-ம் தேதி பகிரப்பட்ட இந்த வீடியோ 80 லட்சத்து 90 ஆயிரம் பார்வைகளைப் பெற்றுள்ளது. பல சமூக ஊடக பயனர்கள் சீன பொது ரயில் பெட்டியில் 'குட்கா' கறை இல்லை என்பதை குறிப்பிட்டு கருத்து தெரிவித்துள்ளனர். ஒரு எக்ஸ் பயனர் எழுதுகையில், “ரயில் சுத்தமாக இருக்கிறது, ரயிலைக் கறை ஆக்க பயணிகள் பான் குட்காவைப் பயன்படுத்துவதில்லை. பிளாஸ்டிக் கழிவுகளை யாரும் கண்ட இடத்தில் வீசுவதாகத் தெரியவில்லை.” என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு பயனர் கருத்துத் தெரிவிக்கையில், “இவை கிராமப்புறம் மற்றும் பழமையானவை, விதிமுறை அல்ல. உலகின் மற்ற பகுதிகளை விட சீனாவில் அதிக அதிவேக ரயில் உள்ளது என்பதை நீங்கள் குறிப்பிட வேண்டும். டிக்கெட்டுகள் மலிவு மற்றும் ஆண்டுக்கு 13 பில்லியன் ஒட்டுமொத்த பயணங்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
மூன்றாவது பயனர், “ஒரே வித்தியாசம் என்று கூறும் எவரும், இந்தியாவில் பொது வகுப்பை ஒருபோதும் எடுத்ததில்லை. யூடியூபரால் இந்திய பொது வகுப்பில் இவ்வளவு சுதந்திரமாக நடமாட முடியாது; (மேலும், இவை சீனாவின் அதிவேக ரயில்கள் என்று யூடியூபர் தெளிவுபடுத்தியதாக நம்புகிறேன்.)” என்று குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.