/indian-express-tamil/media/media_files/2025/08/24/youtuber-duduma-waterfall-odisha-2025-08-24-16-33-20.jpg)
திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாறையின் மீது சிக்கிக்கொண்ட சாகர் டுடுவை, அங்கிருந்த சுற்றுலா பயணிகள் காப்பாற்ற முயற்சிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. Photograph: (Image source: @manas_muduli/X)
காணாமல் போன 22 வயது யூடியூபர் சாகர் டுடு, தன் நண்பர் அபிஜித் பெஹெராவுடன் உள்ளூர் சுற்றுலா தலங்களைப் பற்றிய வீடியோக்களைத் தயாரிப்பதற்காக கோராபுட் சென்றிருந்தார். அப்போது துடுமா அருவியின் அருகே ட்ரோன் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து நடந்தது.
திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாறையின் மீது சிக்கிக்கொண்ட சாகர் டுடுவை, அங்கிருந்த சுற்றுலா பயணிகள் காப்பாற்ற முயற்சிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த முயற்சி தோல்வியடைய, கண் இமைக்கும் நேரத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு அவர் காணாமல் போனது காண்போரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
The video is reportedly from Koraput, where a YouTuber was swept away by strong currents at Duduma Waterfall.
— Manas Muduli (@manas_muduli) August 24, 2025
People must exercise extreme caution while filming and never put their lives at risk.
Such a tragic incident. pic.twitter.com/8hHemeWv2e
இதை பார்த்த பயனர்கள், "மக்களின் இந்த ஆபத்தான 'ரீல்ஸ் மோகம்' எல்லாவற்றையும் அழித்துவிடும்" என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் ஒருவர், "மக்கள் ஏன் வீடியோ எடுப்பதற்காக தங்கள் உயிரைப் பணயம் வைக்கிறார்கள்? இதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை" என்று பதிவிட்டுள்ளார்.
இதேபோல், “மழைக்காலத்தில் அருவிக்கு செல்வது முட்டாள்தனம்” என்றும், “இயற்கை முட்டாள்தனமான மனிதர்களை தானாகவே குறைத்துவிடுகிறது” என்றும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
கனமழையின் காரணமாக மச்சகுண்டா அணையில் இருந்து சுமார் 2,000 கனஅடி நீர் திறக்கப்பட்டதால் நீர்வரத்து திடீரென அதிகரித்துள்ளது. அணை திறக்கப்படுவதற்கு முன்பே கீழ் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மச்சகுண்டா காவல் துறையினரும், தீயணைப்புத் துறையினரும், சாகர் டுடுவை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், இதுவரை அவர் கண்டுபிடிக்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.