ஜெகன் வாகனம் மீது பூ தூவிய ஒய்.எஸ்.ஆர்.சி.பி ஆதரவாளர் உடல் நசுங்கி மரணம்: ஆந்திர போலீசார் விசாரணை; வைரல் வீடியோ

ஆந்திரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டியின் வாகனம் மோதியதில் ஒய்.எஸ்.ஆர்.சி.பி ஆதரவாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஆந்திராவின் குண்டூர் மாவட்ட போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்தச் சம்பவம் புதன்கிழமை நிகழ்ந்துள்ளது.

ஆந்திரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டியின் வாகனம் மோதியதில் ஒய்.எஸ்.ஆர்.சி.பி ஆதரவாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஆந்திராவின் குண்டூர் மாவட்ட போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்தச் சம்பவம் புதன்கிழமை நிகழ்ந்துள்ளது.

author-image
WebDesk
New Update
Jagan Mohan Reddy xy

பழநாயுடுவுக்கு ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி சென்றபோது இந்தச் சம்பவம் நடந்தது. பூக்கள் தூவும் முயற்சியில் வாகனத்தின் முன் தவறி விழுந்தபோது, செல்லி சிங்கையா (55) என்பவர் நசுங்கி உயிரிழந்தார். Photograph: (Photo: X/@ysjagan)

ஆந்திரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டியின் வாகனம் மோதியதில் ஒய்.எஸ்.ஆர்.சி.பி ஆதரவாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஆந்திராவின் குண்டூர் மாவட்ட போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்தச் சம்பவம் புதன்கிழமை நிகழ்ந்துள்ளது.

ஆங்கிலத்தில் படிக்க:

Advertisment

பல்நாடுவுக்கு ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி சென்றபோது இந்தச் சம்பவம் நடந்தது. பூக்கள் தூவும் முயற்சியில் வாகனத்தின் முன் தவறி விழுந்தபோது, செல்லி சிங்கையா (55) என்பவர் நசுங்கி உயிரிழந்தார். அதிகாரிகள் கூறுகையில், வாகனத்தின் முன் வலது சக்கரம் அவர் கழுத்தில் ஏறியது.

சிங்கையாவை போலீசாரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி ஆதரவாளர்களும் அருகில் உள்ள மருத்துவமனைக்கும், பின்னர் குண்டூர் அரசு மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர். ஆனால், அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக குண்டூர் காவல் கண்காணிப்பாளர் எஸ்.சதீஷ் குமார் தெரிவித்தார்.

முதலில், ஜெகன் கான்வாயில் ஒரு வாகனத்தில் ஏறி விழுந்ததால் சிங்கையா காயமடைந்ததாகக் கருதப்பட்டது, ஆனால், ஜெகன் பயணித்த வாகனத்தின் அடியில் அவர் நசுங்கிய வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளன.

Advertisment
Advertisements

சிங்கையா வெங்கலாயபாலம் கிராமத்தைச் சேர்ந்தவர். ஜெகனை பூக்கள் தூவி வரவேற்கச் சென்றிருந்தார். போலீஸ் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் ஒரு முன்னாள் சர்பஞ்ச் குடும்பத்தை சந்திக்க பல்நாடு மாவட்டத்தில் உள்ள ரெண்டப்பள்ள கிராமத்திற்குச் சென்றுவிட்டு ஜெகன் திரும்பிக்கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

சிங்கையா "துரதிர்ஷ்டவசமாக கான்வாயின் முன் விழுந்து நசுங்கினார்" என்று எஸ்.பி. குமார் கூறினார்.

அதே நாளில், மற்றொரு ஒய்.எஸ்.ஆர்.சி.பி ஆதரவாளரான 30 வயதான பி.ஜெயவர்தன் ரெட்டி, சத்தெனப்பள்ளி கடிகாரக் கோபுரம் அருகே ஜெகன் ஆதரவாளர்களின் கூட்டத்தில் மயங்கி விழுந்து இறந்தார். குண்டூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

பல்நாடுவுக்கு ஜெகன் சென்றது ஏற்கனவே ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. ஒய்.எஸ்.ஆர்.சி.பி ஆதரவாளர் வைத்திருந்த பதாகை ஒரு போலீஸ் வழக்கிற்கும், அரசியல் பழிவாங்கலுக்கும் வழிவகுத்தது.

புதன்கிழமை ஒய்.எஸ்.ஆர்.சி.பி தொண்டர் டி.ரவிதேஜா வைத்திருந்த பதாகையில், "2029-ல் ஒய்.எஸ்.ஆர்.சி.பி ஆட்சிக்கு வரும்போது" என்றும், அதற்கு கீழே, "ரப்ப ரப்ப நருகுதா" என்றும் இருந்தது. இந்த தெலுங்கு வார்த்தைகள் புஷ்பா 2-ல் அல்லு அர்ஜுன் பேசிய ஒரு வரியின் ஒரு பகுதி. அதன் பொருள் "ஒவ்வொன்றாக வெட்டி வீழ்த்து" என்பதாகும்.

ரவிதேஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாக பல்நாடு போலீசார் தெரிவித்தனர்.

ஆந்திரப் பிரதேச உள்துறை அமைச்சர் வி.அனிதா, அத்தகைய "வன்முறை" அறிக்கைகளை ஜெகன் ஊக்குவிப்பதாக குற்றம் சாட்டினார்.

அந்த பதாகை வன்முறையை நோக்கமாகக் கொண்டது அல்ல என்றும், "இப்போது ஒரு திரைப்பட வசனத்தைக் கூட மேற்கோள் காட்ட முடியாதா?" என்றும் ஜெகன் பதாகையை ஆதரித்துப் பேசினார்.

Viral Video

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: