என்னது ரூ. 11 கோடிக்கு முக கவசமா? போற உசுரு கொரோனாவுலயே போகட்டும்!

ஆடம்பரமா போட்டுக்கிட்டு சுத்தலாமே தவிர இந்த கால் கிலோ மாஸ்க்கை மாட்டிக்கிட்டு பக்கத்து தெரு கூட போக முடியாது என்பது தான் உண்மை.

By: August 13, 2020, 3:01:26 PM

the costliest mask on the earth prices Rs 11 crore : கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரிக்க துவங்கிய ஆரம்ப காலத்தில் இருந்தே முகக்கவசங்கள் அணிவதன் அவசியம் அனைவருக்கும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. அன்றைய நாளில் இருந்தே சர்ஜிக்கல் மாஸ்க் துவங்கி என்95 மாஸ்க், துப்பட்டாவில் மாஸ்க், டீ-சர்ட்டில் மாஸ்க், தங்கத்தில் மாஸ்க், வெள்ளியில் மாஸ்க் என்று வகை வகையாக மாஸ்க்குகள் சந்தைக்கு வருகின்றன.

the costliest mask on the earth prices Rs 11 crore

ஆனாலும் பாருங்களேன் இங்க ஒரு மாஸ்க்கோட விலை ரூ. 11 கோடியாம். கேட்கும் போதே தலை சுற்றத்தான் செய்கிறது.  இஸ்ரேல் நாட்டை நகை வடிமைப்பாளர்கள் 18 கிராம் வெள்ளைத் தங்கம், 3600 வெள்ளை மற்றும் கறுப்பு நிற வைரங்கள் கொண்ட முக கவசம் ஒன்றை தயாரித்துள்ளனர். இதன் விலை 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்திய மதிப்புப்படி இதன் விலை ரூ. 11,22,10,000 ஆகும்.

the costliest mask on the earth prices Rs 11 crore

தன்னுடைய யுவெல் (Yvel) நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட இந்த முக கவசத்தை அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர் ஆர்டர் செய்து வாங்கியுள்ளார் என்று முகக்கவசவத்தை வடிவமைத்துள்ள வடிமைப்பாளர் இசாக் லேவி தெரிவித்துள்ளார். இது போன்றே மேலும் இரண்டு ஆர்டர்கள் வந்துள்ளன என்றும் இந்த ஆண்டின் இறுதிக்குள் வாடிக்கையாளர்களுக்கு அவை அனுப்பப்பட்டு விடும் என்றும் கூறியுள்ளார்.

the costliest mask on the earth prices Rs 11 crore

இதன் மொத்த எடையை கேட்டால் தான் தலையே சுற்றுகிறது. கால் கிலோவிற்கும் சற்று அதிகமாக இருக்கும் இந்த முகக்கவசம் சாதாரண முகக்கவசங்களை காட்டிலும் 100 மடங்கு எடை அதிகம். அதனால் இதனை ஒரு அலங்காரப் பொருளாகவே பார்க்க முடியுமே தவிர பயன்பாட்டிற்கு உதவாது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Yvel israeli jewelry company made the costliest mask on the earth

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X