Advertisment

4 முக்கிய சீரியல் நடிகைகள் இடையே பிரச்னையா? வைரல் வீடியோ

viral news in tamil, zee tamil serial actresses video goes viral: தற்போது இந்த தொலைக்காட்சியில் வரும் சீரியல் நடிகைகள் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவை பூவே பூச்சூடவா சீரியல் நடிகை ரேஷ்மா தான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ரேஷ்மா, ஷாபானா, நக்‌ஷத்திரா மற்றும் சைத்ரா ரெட்டி கடற்கரையில் சேர்ந்து இருப்பதை போன்று வீடியோ வெளியிட்டுள்ளனர்.

author-image
WebDesk
New Update
4 முக்கிய சீரியல் நடிகைகள் இடையே பிரச்னையா? வைரல் வீடியோ

இந்தியாவின் முன்னனி தொலைக்காட்சி நிறுவனத்தின் தமிழ் சேனலான ஜீ  தமிழ் தொலைக்காட்சி தற்போது தமிழகத்தில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மற்ற நிகழ்ச்சிகளை விட சீரியல்களுக்கென்றே தனி ரசிகர் பட்டாளமே உண்டு. டிஆர்பி யிலும் இத்தொலைக்காட்சியின் சீரியல்கள் டாப்பில் உள்ளது. பெரும்பாலான தமிழ் குடும்பங்கள் இந்த சேனலில் வரும் சீரியல்களை விரும்பி பார்க்கின்றனர்.

Advertisment

இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்கள் செம்பருத்தி, பூவே பூச்சூடவா, யாரடி நீ மோகினி போன்றவற்றிற்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால் மற்ற தொலைக்காட்சி நடிகர் நடிகைகள் போல் இவர்கள் ஒன்றாக இணைந்து போட்டோவோ வீடியோவோ சமூக வலைதளங்களில் வெளியிடுவதில்லை. இதனால் ரசிகர்கள் இவர்களுக்குள் ஒற்றுமை இல்லையோ என சமூக வலைதளத்தில் விவாதித்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது இந்த தொலைக்காட்சியில் வரும் சீரியல் நடிகைகள் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவை பூவே பூச்சூடவா சீரியல் நடிகை ரேஷ்மா தான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ரேஷ்மா, ஷாபானா, நக்‌ஷத்திரா மற்றும் சைத்ரா ரெட்டி கடற்கரையில் சேர்ந்து இருப்பதை போன்று வீடியோ வெளியிட்டுள்ளனர்.

இதில் ரேஷ்மா "நாங்கள் ஒருவருக்கொருவர் ஏன் சந்திக்கவில்லை, புகைப்படங்கள் பதிவிடுவதில்லை, பேசிக்கொள்வதில்லை என்று கேட்கும் அனைவரின் அக்கறைக்கும் நன்றி. நாங்கள் எப்போதுமே ஒன்றாக தான் இருக்கிறோம் என்பதை நாங்கள் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறோம். புகைப்படங்களை பதிவிடாததால் நாங்கள் சண்டையிட்டு கொண்டோம் என்று அர்த்தம் இல்லை. எனவே இதே கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்பதை நிறுத்துங்கள், நன்றி" எனவும் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Serial Actress Viral Video Zee Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment